ASI கீழடி அகழாய்வை கைவிட்டு வெளியேறியது ஏன்? - சு.வெங்கடேசன் சரமாரி கேள்வி
Nov 21, 2023, 10:14 IST
ASI கீழடி அகழாய்வை கைவிட்டு வெளியேறியது ஏன் என்பதை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூற முடியுமா? என மதுரை எம்.பி. சு.வெங்கடேசன் கேள்வி எழுப்பியுள்ளார்.
இது தொடர்பாக சு.வெங்கடேசன் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், மாண்புமிகு மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்கள் மதுரையில் ASI பற்றியும், தமிழ்நாட்டு வரலாறு பற்றியும் பெருமையோடு பேசியிருக்கிறார். அவருக்கு எனது நன்றி. தமிழ்நாட்டு வரலாற்றின் புதிய திருப்புமுனை கீழடி. ஆனால் இதே ASI கீழடி அகழாய்வை கைவிட்டு வெளியேறியது ஏன் என்பதை கூற முடியுமா?