×

இலக்கியா தற்கொலைக்கு நான் காரணமல்ல... ஸ்டண்ட் இயக்குநர் விளக்கம்

 

இன்ஸ்டா பிரபலம் இலக்கியா அளவுக்கு அதிகமான ஊட்டச்சத்து மாத்திரைகளை உட்கொண்டு தற்கொலை முயற்சித்துள்ளார்.

ஸ்டண்ட் இயக்குநர் திலீப் சுப்பராயன் மட்டும் தான் என் சாவுக்கு காரணம் என இன்ஸ்டாகிராமில் ஸ்டோரி பதிவிட்ட இலக்கியா, அடுத்த சில நிமிடங்களில் அளவுக்கு அதிகமான ஊட்டச்சத்து மாத்திரைகளை உட்கொண்டு தற்கொலை முயற்சித்தார்.

இந்நிலையில் இதற்கு விளக்கமளித்துள்ள ஸ்டண்ட் இயக்குநர் திலீப் சுப்பராயன், “இன்று காலை இன்ஸ்டாகிராம் தளத்தில் எனது பெயரைக் குறிப்பிட்டு முற்றிலும் பொய்யான பதிவு ஒன்று பகிரப்பட்டது. பிறகு, அந்தப் பதிவு உடனடியாக நீக்கபட்டு, 'All are Fake News' என அந்த நபர் அவருடைய இன்ஸ்டாகிராம் பக்கத்திலேயே விளக்கமும் அளித்துவிட்டார். இருப்பினும், என் மீது உள்ள காழ்ப்புணர்சியில், என் பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் உருவாக்கபட்ட உண்மைக்கு புறம்பான அந்தப் பதிவை சில ஊடகங்கள் எவ்வித உண்மையையும் ஆராயாமல் பகிர்ந்து வருகிறார்கள். இதனால் நானும் எனது குடும்பத்தாரும் மன உளைச்சலுக்கு ஆளாகிவருகிறோம். மீண்டும், அந்தப் பதிவில் எவ்வித உண்மையும் இல்லை, அது முற்றிலும் பொய் என பத்திரிகை, தொலைக்காட்சி தொலைக்காட்சி மற்றும் மற்றும் சமூக வலைதள ஊடக நண்பர்களுக்கு தெரிவித்துக்கொள்கிறேன். இதையும் மீறி என் மீது பொய் குற்றசாட்டுகள் பரப்புபவர்களை சட்டரீதியாக எதிர்கொள்வேன் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன். நன்றி” எனக் குறிப்பிட்டுள்ளார்.