“500 யூனிட்களுக்கு மேல் பயன்படுத்தும் வீடுகளில் மின் கட்டணம் 20% அதிகரித்தால் ஆய்வு”- மின் வாரியம்
வீட்டு மின் கட்டணங்களில் குளறுபடி ஏற்பட்டால் வசூல் தற்காலிகமாக நிறுத்தப்படும் என மின்வாரிய அறிவித்துள்ளது.
வீடுகளுக்கான மின்சார கட்டணங்களில் குளறுபடி ஏற்பட்டால், இனி நுகர்வோர் பாதிக்கப்படாமல் நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் (TNEPDCL) புதிய நடைமுறையை அறிவித்துள்ளது. இதுதொடர்பாக மின்சார வாரியம் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில், வீடுகளுக்கான மின்சார கட்டணங்களில் குளறுபடி ஏற்பட்டால் வீடுகளுக்கு மின்சார கட்டணங்களில் குளறுபடி ஏற்பட்டால், உடனடியாக வசூலை நிறுத்தி சரிபார்க்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மின் பயன்பாடு & கட்டணத்தில் திடீர் அதிகரிப்பு ஏற்படும் வீட்டு மின் இணைப்புகளை மறு சரிபார்ப்புக்கு உட்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது. வீட்டு மின் கட்டணங்களில் குளறுபடி ஏற்பட்டால் வசூல் தற்காலிகமாக நிறுத்தப்படும். மின் கட்டண வசூலின் போது, ஜூலை அல்லது ஆகஸ்ட் 2026 மாத மின் பயன்பாட்டுடன் ஒப்பிட வேண்டும். தவறான மீட்டர் ரீடிங் கண்டறியப்பட்டால் மறு மதிப்பீடு செய்ய வேண்டும். தவறான ரீடிங் பதிவு செய்யும் அதிகாரிகள் மீது உரிய ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும். கூடுதலாக மின் கட்டணம் செலுத்தியிருப்பது தெரியவந்தால், அடுத்த மாத மின் கட்டணத்தில் சரிசெய்யப்படும். புதிய நடைமுறையின்படி 500 யூனிட்டுக்கு மேல் பயன்படுத்திய மின் நுகர்வோர்கள் கண்காணிக்கப்படுவார்கள். செப்டம்பர் (அ) அக்டோபரில் கட்டணம் 20%க்கும் அதிகமாக உயர்ந்தால், மின் கட்டணம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.