☰
×

சொதப்பிய ராகுல் காந்தி நிகழ்ச்சி... வெளியேறிய மாணவர்கள்! நடந்தது என்ன?

 

ஒரு நாள் சுற்றுப்பயணமாக தமிழகம் வந்த ராகுல் காந்தி சென்னை விமான நிலையம் வந்ததும் தமிழக முதல்வர் விஜய் அவர்களை சந்தித்து பேசினார் பின்பு இருவரும் சேர்ந்து உணவு அருந்தினர். அந்த நிகழ்வு முடிந்ததும் காங்கிரஸ் சார்பாக 'மாணவரின் குரல்' என்ற ஒரு நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அந்த நிகழ்ச்சி சரியாக 5 மணிக்கு தொடங்கியது.

மாணவர்கள் பத்தாயிரம் பேருக்கு மேல் அந்த கூட்டத்தில் திரண்டனர். முதலில்  பாடல் கச்சேரியுடன் சரியாக 45 மணி நேரம் நிகழ்ச்சி நடைபெற்றது. மாணவர்கள் மிகுந்த உற்சாகத்துடன் இருந்தனர். அதன் பின்பு பாப்பாடகர் அறிவு அவர்களின் நிகழ்ச்சி நடைபெற்றது. சரியாக 35 நிமிடத்திற்கு மேல் நடந்தது. அதிலும் மாணவர்கள் ஆடல், பாடல் என சந்தோசமாக இருந்தனர்6  மணிக்கு மேல் ராகுல் காந்தி  மாணவர்களுடன் இன்று நிகழ்ச்சியில் கலந்து  கொண்டார்.

 இந்த நிகழ்ச்சியை இந்தியா முழுவதும் சென்று சேரும் வகையில் அனைத்து பத்திரிகையாளர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டது. மாணவர்களுடன் ராகுல் காந்தி உரையாடுவார் என்று கூறியிருந்தனர். ஆனால் அது போன்ற எந்த ஒரு நிகழ்வும் நடைபெறவில்லை. நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் ஐந்து பேரை தேர்வு செய்து வைத்தனர். ஐந்து பேரும் ராகுல் காந்தியிடம் கேட்கும் கேள்விகளுக்கு ஒரு சில பதில் அளித்தார் ராகுல் காந்தி. அவ்வளவுதான் இந்த நிகழ்ச்சி. ஏற்பாட்டாளர்கள் இந்த நிகழ்ச்சி சரியாக வடிவமைக்கவில்லை என வந்திருக்கும் பத்திரிக்கையாளர்கள் அனைவரும் கூறியதை கேட்க முடிந்தது. ராகுல் காந்தி பேசிக் கொண்டிருக்கும் பொழுதே மாணவர்கள் சிலர் கலைந்து சென்றனர். ராகுல் காந்தி என்ன பேசுகிறார் என்று காது கொடுத்து கூட கேட்கவில்லை.