“சொல்ல சொல்ல கேட்காம கடையை திறக்குறீங்க”- டாஸ்மாக் கடை மீது கல்வீச்சு! தாக்குதலில் மயங்கிய மாணவர்கள்
கோடாலி கிராமத்தில் உள்ள டாஸ்மாக் கடையை மூடக்கோரி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஜெயங்கொண்டம் அருகே கோடாலி கிராமத்தில் உள்ள டாஸ்மாக் கடையை மூட வேண்டும் என பலமுறை கோரிக்கை விடுத்தும் மூடப்படாததால், சீருடையுடன் பள்ளி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டம் நடக்கும் போதே ஊழியர்களால் டாஸ்மாக் கடை திறக்கப்பட, அங்கு கற்களை வீசியும் தாக்குதல் நடத்தினார். இதனால் மாணவர்கள் - போலீசார் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. டாஸ்மாக் கடையை மூடக்கோரி நடந்த போராட்டத்தில் மாணவர்கள் சிலர் மயங்கி விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. பள்ளி மாணவர்கள் மீது காவல்துறையினர் நடத்திய தடியடியில் பள்ளி மாணவர்கள் படுகாயம் அடைந்து மயங்கியதாகவும் குற்றஞ்சாட்டப்படுகிறது.மாணவர்களுடன் பொதுமக்களும் களத்தில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டதால் அணைக்கரை- ஜெயங்கொண்டம் சாலையில் 3 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.