☰
×

சென்னையில் மோடிக்கு எதிராக மாணவர்கள் போராட்டம்- 100க்கும் மேற்பட்டோர் கைது

 

பிரதமர் மோடி வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை சைதாப்பேட்டை பனகல் மாளிகை அருகே மாணவர் அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சென்னை சைதாப்பேட்டை பனகல் மாளிகை அருகே, தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலக வலியுறுத்தியும், பிரதமர் நரேந்திர மோடியின் சென்னை வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்தும், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் மற்றும் இந்திய மாணவர் சங்கம் சார்பில் கருப்புக்கொடி போராட்டம் நடைபெற்றது. இந்தப் போராட்டத்தில் பிரதமர் மோடிக்கு எதிராகக் கருப்புக்கொடி காட்டி, கண்டன முழக்கங்களை எழுப்பிய 100-க்கும் மேற்பட்ட மாணவர்கள் மற்றும் இளைஞர்களைக் காவல்துறையினர் கைது செய்தனர்.

இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலகக் கோரி டெல்லி கன்னாட் பிளேஸ் பகுதியில் 2ம் நாளாக போராட்டம் நடைபெற்று வருவது குறிப்பிடதக்கது.