×

”நாங்க சொன்ன எல்லாத்தையும் CM எழுதிவெச்சிகிட்டாரு”- மாணவர்கள் நெகிழ்ச்சி பேட்டி

 

சைதாப்பேட்டை எம்.சி.ராஜா சமூக நீதி விடுதியில்  திடீர் ஆய்வு செய்த முதலமைச்சர் விஜய்யிடம் "சாப்பாடே சரியில்லை" என மாணவர்கள் புலம்பியுள்ளனர்.

முதலமைச்சரின் ஆய்வு குறித்து செய்தியாளர்களிடம் பேசிய மாணவர்கள், “புழு, பூச்சி இருக்கும் உணவை தான் சாப்பிட்டுக் கொண்டிருந்தோம். நாங்கள் போராட்டம் நடத்திய பிறகுதான் உணவு மாறியது. கழிவறை வசதிகள் போதுமானதாக இல்லை. ஊழியர்கள் பற்றாக்குறை, போதிய சிசிடிவிக்கள் இல்லை என முதல்வரிடம் கூறினோம். நாங்க சொன்ன எல்லாத்தையும் CM எழுதிவெச்சிகிட்டாரு. பாக்குறதுக்கு தான் 10 மாடி கட்டடம் வசதியான வாழ்க்கைனு நினைப்பீங்க, ஆனா உள்ள அவ்ளோ கேவலமா இருக்குனு வெளில யாருக்குமே தெரில.. எவ்ளோ பிரச்சனை தெரியுமா இருக்கு இங்க. CM இங்க வர போறாருனு 10 நிமிஷத்துக்கு முன்னாடி தான் தெரியும் உடனே இருக்குற எல்லா பிரச்சனையும் சொல்லிட்டோம். விடுதியில் உள்ள குறைகளை CM விஜய்யிடம் கூறினோம். குறைகளை சரி செய்வதாக உறுதி அளித்தார்” என்றனர்.