மதுபோதை மாணவர்களால் பள்ளியில் ஆசிரியர் மண்டை உடைப்பு
Jul 16, 2025, 17:09 IST
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே மது போதையில், மது பாட்டிலால் தாக்கி ஆசிரியர் மண்டையை உடைத்த மாணவர்களின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகேயுள்ள, திருத்தங்கல் சீ.ரா.அரசு மேல்நிலைப்பள்ளியில் மது போதையில் மாணவர்கள் இருப்பதை அறிந்து, ஆசிரியர் சண்முக பாண்டியன் கண்டித்துள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த மாணவர்கள், ஆசிரியரை பாட்டிலால் தாக்கி மண்டையை உடைத்துள்ளனர். மாணவர்களால் காயமடைந்த ஆசிரியர் சிகிச்சைக்காக மருத்துவமனையல் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதில் ஆசிரியர் சண்முக பாண்டியன் மண்டை உடைந்தது. இச்சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர். 4 மாணவர்கள் சேர்ந்து தாக்குதல் நடத்தியதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.