×

வெடி விபத்தில் பெற்றோரை இழந்த மாணவி: மனதை உருக்கும் சம்பவம்!

விருதுநகர் பட்டாசு ஆலை விபத்தில் உயிரிழந்த மாணவிக்கு, அரசு உதவி புரிய வேண்டுமென கோரிக்கை எழுந்திருக்கிறது. விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ள அச்சங்குளத்தில் இயங்கி வந்த தனியார் பட்டாசு ஆலையில் நேற்று பயங்கர வெடி விபத்து ஏற்பட்டது. இதில் சிக்கிய 7 மாத கர்ப்பிணி உட்பட 19 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். பட்டாசு ஆலை விதியை மீறி இயங்கியதால் இந்த விபத்து ஏற்பட்டதும் உரிமம் பெற்றவர் குத்தகைக்கு விட்டதும் விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த விபத்து தொடர்பாக
 

விருதுநகர் பட்டாசு ஆலை விபத்தில் உயிரிழந்த மாணவிக்கு, அரசு உதவி புரிய வேண்டுமென கோரிக்கை எழுந்திருக்கிறது.

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ள அச்சங்குளத்தில் இயங்கி வந்த தனியார் பட்டாசு ஆலையில் நேற்று பயங்கர வெடி விபத்து ஏற்பட்டது. இதில் சிக்கிய 7 மாத கர்ப்பிணி உட்பட 19 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். பட்டாசு ஆலை விதியை மீறி இயங்கியதால் இந்த விபத்து ஏற்பட்டதும் உரிமம் பெற்றவர் குத்தகைக்கு விட்டதும் விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டது.

இந்த விபத்து தொடர்பாக 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டிருக்கும் நிலையில், இன்று காலை குத்தகைதாரர் பொன்னுபாண்டி கைது செய்யப்பட்டார். இதனிடையே, உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு மத்திய அரசும் தமிழக அரசும் நிவாரணம் அறிவித்தது. இந்த நிலையில், பட்டாசு ஆலை விபத்தில் பெற்றோரை இழந்த மாணவி ஒருவருக்கு அரசு உதவ வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது.

சூரங்குடி கிராமத்தை சேர்ந்த தம்பதி பாக்கியராஜ் – செல்வி. இவர்கள் இருவரும் விபத்தில் உயிரிழந்த நிலையில், இவர்களது மகள் நந்தினி(12) உறவினர் வீட்டில் தங்கியிருக்கிறார். மாணவியின் நிலை காண்போரை கலங்கச் செய்துள்ளது. அவரது படிப்பு செலவிற்கும் இதர செலவுகளுக்கும் பட்டாசு உரிமையாளர்கள் சங்கம் சார்பில் ரூ.11 லட்சம் நிதி திரட்டப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.