×

படிக்கட்டில் தவறி விழுந்து மாணவர் உயிரிழப்பு- ஹாஸ்ட்டலில் நடந்தது என்ன?

 

சென்னை அடுத்த மேற்கு தாம்பரத்தில் உள்ள சாய்ராம் பொறியியல் கல்லூரி மாணவர்கள் தங்கும் விடுதியில் 2 ஆம் ஆண்டு மாணவர் படிக்கட்டில் தவறி விழுந்து உயிரிழந்தார்.


சென்னை அடுத்த மேற்கு தாம்பரத்தில் உள்ள சாய்ராம் பொறியியல் கல்லூரி மாணவர்கள் தங்கும் விடுதியில் 2 ஆம் ஆண்டு மாணவர் படிக்கட்டில் தவறி விழுந்து உயிரிழந்தார். சென்னை மேற்கு தாம்பரத்தில் உள்ள சாய்ராம் கல்லூரி விடுதியில் 2 ஆம் ஆண்டு மாணவர்  நித்தீஷ், மயிலாடுதுறையை சேர்ந்த நித்தீஷ் , சாய்ராம் கல்லூரியில் AI 2 ஆம் ஆண்டு படித்து வந்தார். இன்று கல்லூரி விடுதியின் படிக்கட்டுகளில் இறங்கிய போது மாணவர் நித்தீஷ் தவறி விழுந்து பலியானதாக விடுதி நிர்வாகம் தகவல் கூறியுள்ளது.

மாணவன் உயிரிழப்பில் மர்மம் என்று உறவினர்கள் குன்றத்தூர் போலீசில் புகாரின் பேரில்  விசாரணை நடந்து வருகின்றது. தாயின் உழைப்பால் கல்லூரியில் படித்து வந்த மாணவர்  நித்தீஷ், திடீரென உயிரிழந்ததால் உறவினர்கள் அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளனர்.