×

ஆசிரியர் அடித்ததால் கண் பார்வையை இழந்த மாணவர் உயிரிழப்பு!

பள்ளி ஆசிரியர் ஒருவர் மாணவனை தாக்கியதில் அவருக்கு கண்பார்வை பறிபோனதுடன் தற்போது சிகிச்சை பலனின்றி உயிரும் பறிபோகியுள்ளது. ஆசிரியர்கள் மாணவர்களை அடிக்கக் கூடாது என்று எவ்வளவு கட்டுப்பாடு விதிக்கப்பட்டாலும் இத்தகைய சம்பவங்கள் தொடர்ந்து நடந்து கொண்டே தான் இருக்கின்றன. சமீபத்தில் ஒரு ஆசிரியர், மாணவரைப் பிறப்புறுப்பில் அடித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. சென்னை பள்ளிகரணையை சேர்ந்த தம்பதி வேலு-ரேகா. கூலி தொழிலாளியான வேலுவுக்கு 3 குழந்தைகள் உள்ளனர். இதில் முதல் மகனான கார்த்திக் மேடவாக்கத்தில் உள்ள
 

பள்ளி ஆசிரியர் ஒருவர் மாணவனை தாக்கியதில் அவருக்கு கண்பார்வை பறிபோனதுடன் தற்போது சிகிச்சை பலனின்றி உயிரும் பறிபோகியுள்ளது.

ஆசிரியர்கள் மாணவர்களை அடிக்கக் கூடாது என்று எவ்வளவு கட்டுப்பாடு விதிக்கப்பட்டாலும் இத்தகைய சம்பவங்கள் தொடர்ந்து நடந்து கொண்டே தான் இருக்கின்றன. சமீபத்தில் ஒரு ஆசிரியர், மாணவரைப் பிறப்புறுப்பில் அடித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 

சென்னை பள்ளிகரணையை சேர்ந்த தம்பதி வேலு-ரேகா. கூலி தொழிலாளியான வேலுவுக்கு 3 குழந்தைகள் உள்ளனர். இதில் முதல் மகனான கார்த்திக் மேடவாக்கத்தில் உள்ள அரசு பள்ளியில் 8ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். கடந்த பிப்ரவரி மாதம் வகுப்பறையில் வைத்து தமிழ் ஆசிரியை உமா என்பவர் இரும்பு ஸ்கேலால் கார்த்திகை பலமுறை தலையில் அடித்ததாக கூறப்படுகிறது. இதில் கார்த்திக்கின் தலையில் வெட்டு காயம் ஏற்பட்டுள்ளது. உடனடியாக கார்த்திக்கை சென்னை இராஜீவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு அவரது பெற்றோர் அழைத்து சென்று பரிசோதித்தனர். அதில் கார்த்திக்கின் பின் தலையில் உள்ள கண்ணுக்கு செல்லக்கூடிய நரம்பு பாதித்து இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதனால் நாளுக்கு நாள் கார்த்திக்கின் கண் பார்வை மங்க ஆரம்பித்தது.

அறுவை சிகிச்சை செய்தும் பலன் இல்லை. கார்த்திக்கின் தலையில் அடிபட்டதால் அவரின் மூளைக்கு செல்லும் நரம்புகள் துண்டிக்கப்பட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இந்நிலையில் கடந்த 6 மாதங்களுக்கும் மேலாக தீவிர சிகிச்சை பெற்றுவந்த கார்த்திக் தற்போது சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.