குடிச்சிட்டு வந்தா வேலை காலி! போன் பேசிட்டே பஸ் ஓட்டினா சஸ்பெண்ட்! டிரைவர், கண்டக்டர்களுக்கு பறந்த உத்தரவு
போக்குவரத்து துறை அமைச்சர் தமிழ் பார்த்திபன், ஓட்டுநர் மற்றும் நடத்துநர்களுக்கு 7 உத்தரவுகளை பிறப்பித்துள்ளார். இனி பஸ்சில் தகராறு, குடித்துவிட்டு வருவது, பாதியில் இறக்கிவிடுவது போன்ற செயல்கள் இருந்தால், TNSTC கிளை மேலாளர் முதல் MD வரை கண்காணிப்பு தீவிரப்படுத்தப்படும்.
1. குடித்துவிட்டு வரக்கூடாது!
மது அருந்திவிட்டு பணிக்கு வந்தால் உடனடி சஸ்பெண்ட்! வேலை பறிபோகும்!
2. போன் பேசிக்கொண்டே பஸ் ஓட்டக்கூடாது!
ஓட்டும்போது செல்போன் பேசினால், சமூக வலைதளத்தில் புகார் வந்தால் கூட உடனடி விசாரணை, நடவடிக்கை!
3. பயணிகளை பாதியில் இறக்கிவிடக்கூடாது!
பேருந்துகளை நிர்ணயிக்கப்பட்ட நிறுத்தத்தில் தான் நிறுத்த வேண்டும். பயணிகளை பாதி வழியில் இறக்கிவிட்டால், ஏற்றாமல் சென்றால் கடும் நடவடிக்கை!
4. பஸ் பளபளன்னு இருக்கணும்! தூய்மை கட்டாயம்!
ஒவ்வொரு பேருந்தும் தூய்மையாக பராமரிக்கப்பட வேண்டும். அழுக்கு பஸ்சை இயக்கினால் டிப்போ மேனேஜர் முதல் டிரைவர் வரை பதில் சொல்லணும்!
5. பெண்கள், முதியோர், திருநங்கைகளிடம் மரியாதை தான்!
அனைத்து பயணிகளிடமும் மரியாதையுடன், பொறுமையுடன் நடக்க வேண்டும். குறிப்பாக பெண்கள், மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகள், திருநங்கைகளிடம் கூடுதல் அக்கறையுடன் நடக்க வேண்டும் என்பது கட்டாய உத்தரவு!
6. சிறப்பு பஸ் டிரைவர்கள் எங்கும் தங்கக்கூடாது!
தீபாவளி போன்ற சிறப்பு பேருந்துகளில் பணிபுரியும் டிரைவர், கண்டக்டர்கள் அரசு ஒதுக்கிய ஓய்வறையில் மட்டும் தான் தங்க வேண்டும். எங்காவது பஸ்ஸில், வெளியில் தங்கக்கூடாது!
7. புகார் வந்தா உடனே ஆக்சன்!
பயணிகள் கொடுக்கும் புகார், தொலைபேசி புகார், சமூக வலைதள புகார் அனைத்தும் நேரடியாக மண்டல மேலாளர் கவனத்திற்கு போகும். விசாரணை நடத்தி உடனடி நடவடிக்கை எடுக்கப்படும்!