×

ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது

 

வங்கக் கடலில் உள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வங்கக் கடலில் நிலைகொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் மேற்கு- வடமேற்கு திசையில் மணிக்கு 10 கி.மீ வேகத்தில் நகர்ந்து வருகிறது. சென்னைக்கு கிழக்கு- தென் கிழக்கு திசையில் 790 கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் அடுத்த 24 மணி நேரத்தில் மோந்தா புயலாக மாறும் என்றும் நாளை மறுநாள் ஆந்திராவில் புயல் கரையைக் கடக்கும் எனவும் வானிலை மையம் கூறியுள்ளது. புயல் அதிகபட்சமாக மணிக்கு 90-100 கி.மீ. வேகத்தில் காற்று வீசக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்த 3 மணி நேரத்தில் மயிலாடுதுறை, திருவாரூர், நாகை, தஞ்சை உள்ளிட்ட 4 மாவட்டங்களிலும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.