×

எல்லை மீறும் தவெகவினர்... பேரூராட்சி தலைவரின் அலுவலகத்திற்குள் புகுந்து அட்டூழியம்

 

கன்னியாகுமரி மாவட்டம் கிள்ளியூர் அருகே பேரூராட்சி தலைவரின் அலுவலகத்திற்குள் புகுந்து தவெகவினர் அட்டூழியம் செய்தனர். திமுக பேரூராட்சி தலைவியின் அலுவலக அறையில் இருந்த முன்னாள் முதலமைச்சர் மற்றும் துணை முதல் அமைச்சர் படங்களை அகற்றியதுடன் அதனை ரீலிஸ் ஆக வெளிட்டு அலுவலக தளவாட பொருட்களை எடுத்து சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

கன்னியாகுமரி மாவட்டம் கிள்ளியூர் அருகே கீழ்குளம் பேரூராட்சி தலைவராக இருந்து வருபவர் சரளா கோபால். திமுகவைச் சார்ந்த இவர் கடந்த நான்கு ஆண்டுகளாக பேரூராட்சி தலைவராக இருந்து வருகிறார். இந்த நிலையில் நேற்று இவர் அலுவலகத்தில் இல்லாத நேரத்தில், தவெக மேற்கு மாவட்ட செயலாளர் சுபின், ஒன்றிய செயலாளர் மற்றும் நிர்வாகிகள் பலர் பேரூராட்சி அலுவலகத்திற்கு வந்து தலைவரின் அறையை திறந்து அங்கிருந்த முன்னாள் முதலமைச்சர் முக ஸ்டாலின், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோர் படங்களை அகற்றியதோடு அங்கிருந்து பேரூராட்சி தலைவியின் லெட்டர் பேடு, சீல் உள்ளிட்ட அலுவலக தளவாட பொருட்களை எடுத்து சென்றதாக கூறப்படுகிறது. மேலும் முன்னாள் முதலமைச்சர் முக ஸ்டாலின், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோர் படங்களை அகற்றியதை ரீல்ஸ் எடுத்து சமூக வலைதளங்களில் பரப்பி உள்ளனர்.



இந்த நிலையில் இன்று மீண்டும் ஒன்றிய செயலாளர் ஒன்றிய செயலாளர் தலைமையில் தவெகவினர் கும்பலாக வந்து பேரூராட்சி தலைவி சரளாவின் அறைக்குள் புகுந்து அவரிடம் வாக்குவாதம் செய்ததாக கூறப்படுகிறது. இதற்கு அங்கிருந்த சக கவுன்சிலர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். திமுக பேரூராட்சி தலைவரின் அறைக்குள் புகுந்து அலுவலக தளவாட பொருட்க்களை எடுத்து சென்ற தவெகவினர் மீது நடவடிக்கை எடுக்க கேட்டும், அலுவலக பணியில் அத்துமீறி உள்ளே புகுந்து வாக்குவாதம் செய்த நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடுக்க கோரியும் பேரூராட்சி தலைவர் சரளா கோபால் காவல் நிலையத்தில் புகார் செய்துள்ளார்.