×

குழந்தைகளின் எதிர்காலத்தை வைத்துச் சூதாடுவதை நிறுத்துங்கள் - ராகுல் காந்தி ஆவேசம்!

 

நாக்பூர் மாணவருக்கு அபுதாபியில் நீட் மறுதேர்வு மையம் ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

இதுகுறித்து கண்டனம் தெரிவித்திருக்கும் ராகுல் காந்தி, 

பாஸ்போர்ட் இல்லை, அவரை வெளிநாட்டுக்கு அனுப்பக் குடும்பத்திடம் பணவசதி இல்லை, அதோடு பயண ஏற்பாடுகளைச் செய்யப் போதுமான நேரமும் இல்லை. அவர் இரவு முழுவதும் அழுதுகொண்டே இருந்தார்; இப்போது தேர்வை எழுதவே மறுக்கிறார். இது எத்தகைய மன உளைச்சல் என்பதை உங்களால் கற்பனை செய்து பார்க்க முடிகிறதா? இது எப்படி நிகழ்ந்தது? தேர்வு மையத்தை அடைய முடியவில்லை என்ற குறைபாடு எந்த மாணவருக்கும் ஏற்பட்டிருக்கக் கூடாது.

உண்மையில், நாட்டின் மாணவர்களையும் அவர்களின் பெற்றோர்களையும் தேசியத்தேர்வு முகமை சோதித்து பார்ப்பது போலத்தான் உள்ளது. எங்கள் குழந்தைகளின் எதிர்காலத்தை வைத்துச் சூதாடுவதை நிறுத்துங்கள்.

உணர்வுப்பூர்வமான, பொறுப்பான மற்றும் பொறுப்புக்கூறல் தன்மை கொண்ட ஒரு கல்வி அமைப்பும் தேர்வு ஆணையமுமே அவர்களுக்குத் தேவை. அதை அவர்கள் பெறுவதை நாங்கள் உறுதி செய்வோம் என்று பதிவிட்டுள்ளார்.