"திமுகவை குறை சொல்வதை விடுங்கள்! த.வெ.க.வுக்கு பிரேமலதா ‘அட்வைஸ்’..!
அரியலுாரில் நேற்று தே.மு.தி.க., பொதுச்செயலர் பிரேமலதா அளித்த பேட்டி:
தமிழகத்தில், அனைத்து இடங்களிலும் சட்டம் – ஒழுங்கு பிரச்னை உள்ளது. குற்றங்களை தடுக்கும் வகையில் எல்லா இடங்களிலும் கண்காணிப்பு கேமராக்களை வைக்க வேண்டும். செஞ்சியில் காணாமல் போன குழந்தையின் நிலைமை தெரியாமல், காவல்துறை மிகப்பெரிய சவாலை சந்தித்து வருகிறது.
தற்போதைய த.வெ.க., அரசு, கடந்த தி.மு.க., ஆட்சியை குறை சொல்வதை கைவிட்டு ஆக்கப்பூர்வ நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். மக்களுக்கு என்ன செய்ய போகிறீர்கள் என்பதை சொல்லாமல், பல ஆண்டுகளுக்கு முந்தைய சர்க்காரியா கமிஷன் பற்றி பேசுவதால், மக்களுக்கு எந்த பலனும் இல்லை. இது குறித்து முதல்வரிடமும், தனிப்பட்ட முறையில் கூறியுள்ளேன்.
இந்த ஆட்சியில் மாற்றம் வந்து விட்டதா என்பதை, ஓட்டு போட்ட மக்கள் தான் சொல்ல வேண்டும். மின் வெட்டு, விலைவாசி உயர்வு என ஏராளமான பிரச்னைகள் உள்ளன. அனைத்து துறைகளிலும் மாற்றம், முன்னேற்றம் வர வேண்டுமென மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
இவ்வாறு அவர் கூறினார்.