அனைத்து பெட்ரோல் பங்க்குகளிலும் நிறுத்தம்.. எச்சரிக்கை..!!
யுபிஐ வணிகப் பரிவர்த்தனை கட்டணங்களால் தங்களின் லாப வரம்பு பாதிக்கப்படுவதாக அகில இந்திய பெட்ரோலிய விநியோகஸ்தர்கள் சங்கம் ஒன்றிய அரசுக்குக் கடிதம் எழுதியுள்ளது. ஏற்கனவே குறைவான கமிஷனில் இயங்கும் நிலையில் கூடுதல் கட்டணம் இழப்பை ஏற்படுத்தும் எனக் கூறியுள்ளனர். இக்கட்டணத்திலிருந்து பெட்ரோல் பங்குகளுக்கு முழு விலக்கு அளிக்காவிட்டால், பங்க்களில் யுபிஐ பேமென்ட் ஏற்பதை நிறுத்த நேரிடும் என எச்சரித்துள்ளனர்.
டெல்லி தேசிய தலைநகர் பிராந்தியம் (NCR), பஞ்சாப், உத்தரப்பிரதேசம், மும்பை, கர்நாடகா மற்றும் ராஜஸ்தான் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த டீலர்கள் இது குறித்துக் கருத்து தெரிவிக்கையில், அரசுக்குச் சொந்தமான எண்ணெய் நிறுவனங்கள் (OMCs) மூலம் நிர்ணயிக்கப்படும் தங்களது லாப வரம்பு ஒரு லிட்டருக்கு சுமார் ₹2.40 முதல் ₹3.40 வரை மட்டுமே உள்ளது என்றும், இதில் எந்த வடிவத்தில் MDR கட்டணம் வசூலிக்கப்பட்டாலும் அது கூடுதல் சுமையாக அமையும் என்றும் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து அகில இந்திய பெட்ரோலிய வர்த்தகர்கள் கூட்டமைப்பின் (FAIPT) செய்தித் தொடர்பாளர் மான்டி சேகல் கூறுகையில், “எரிபொருள் சில்லறை விற்பனையாளர்களுக்கு இந்த MDR கட்டணத்திலிருந்து விலக்கு அளிக்கப்படாவிட்டால், ₹2,000 மற்றும் அதற்கு மேற்பட்ட தொகைகளுக்கான UPI பரிவர்த்தனைகளை நாங்கள் ஏற்காமல் நிறுத்த வேண்டி வரலாம்” என்று தெரிவித்துள்ளார்