×

போலீசார் மீது கல்வீச்சு - வடமாநிலத்தவர்கள் 50 பேர் கைது

 

திருவள்ளூர் மாவட்டம் காட்டுப்பள்ளியில் போலீசார் மீது வடமாநில தொழிலாளர்கள் கற்களை வீசி தாக்குதல் நடத்திய சம்பவத்தில் 50 பேர் கைது செய்யப்பட்டனர்.


திருவள்ளூர் மாவட்டம் காட்டுப்பள்ளியில் வடமாநில தொழிலாளி அமர் பிரசாத், மாடியில் ஏறும்போது தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இளைஞரின் மரணத்திற்கு நீதிக்கேட்டு மறியலில் ஈடுபட்ட சக தொழிலாளர்கள், போலீசார் மீது கற்கள் வீசியதால் பரபரப்பு ஏற்பட்டது. உயிரிழந்த தொழிலாளி குடும்பத்திற்கு இழப்பீடு கோரியும் போராட்டக்காரர்கள் கோஷம் எழுப்பினர். பதட்டமான சூழல் நிலவுவதால் அங்கு ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். 

போலீசார் மீது வடமாநில தொழிலாளர்கள் கற்களை வீசி தாக்குதல் நடத்திய சம்பவத்தில் 50 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் மீது பொது சொத்துகளை சேதப்படுத்துதல், அரசு ஊழியரை பணி செய்ய விடாமல் தடுத்தல், உள்ளிட்ட 6 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. வட மாநில தொழிலாளர்களின் கல்வீச்சில் 10க்கும் மேற்பட்ட போலீசார் மற்றும் 4 செய்தியாளர்களுக்கு காயமடைந்தனர். வடமாநில தொழிலாளர்கள் தாக்குதல் நடத்திய சம்பவம் குறித்து கூடுதல் ஆணையர் பவானீஸ்வரி நேரில் ஆய்வு மேற்கொண்டார்.