மக்களே உஷார்..!! 20 செ.மீ அளவிற்கு மழை எதிர்ப்பார்க்கலாம்..!
Oct 21, 2025, 14:53 IST
செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை ஆகிய 4 மாவட்டங்களுக்கு நாளை அதி கனமழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. 20.4 செ.மீ. வரை மழை பதிவாகலாம் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
இந்தநிலையில், தனியார் வானிலை ஆய்வாளர் ஹேமச்சந்திரன் கூறியதாவது:-
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், புதுச்சேரி மற்றும் காவிரி படுகை மாவட்டங்களில் படிப்படியாக பருவமழை தீவிரமடையும் அடுத்த 48 மணி நேரத்தில் வட கடலோரத்தில் மிக கனமழைக்கு வாய்ப்பு; வட கடலோர பகுதிகளில் ஒரிரு இடங்களில் 20 செ.மீ அளவிற்கு மழை எதிர்ப்பார்க்கலாம் என்று கூறியுள்ளார்.
இதனிடையே கனமழை எதிரொலியாக சென்னை செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர்வரத்து 1,000 கன அடியாக அதிகரித்துள்ளது. செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்மட்டம் மொத்தம் உள்ள 24 அடியில் 20.32 ஆக உயர்ந்துள்ளது. கொள்ளளவு 2,683மி.கன அடியாக உள்ளது.