மக்களே உஷார்..!! கோவை,நீலகிரி மாவட்டங்களுக்கு இன்று ஆரஞ்ச் அலெர்ட்..!!
தமிழகத்தில் சில இடங்கள் மற்றும் புதுச்சேரியில், இன்று இடி, மின்னலுடன், மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
கன்னியாகுமரி, நீலகிரி, கோவை மாவட்டங்களில், சில இடங்களில், இன்று மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. இதற்கான 'ஆரஞ்ச்' எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தென்காசி, திருநெல்வேலி, தேனி, திண்டுக்கல், திருப்பூர், விருதுநகர், மதுரை, சிவகங்கை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, சேலம், திருவண்ணாமலை, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, விழுப்புரம், திருவள்ளூர், வேலுார், செங்கல்பட்டு, ஈரோடு மாவட்டங்கள், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில், இன்று பலத்த காற்றுடன், கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
தமிழகம், புதுச்சேரியில், சில இடங்களில், இன்று முதல் ஜூன், 8 வரை, அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட, 4 டிகிரி செல்ஷியஸ் வரை அதிகரிக்க வாய்ப்புள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.