×

உதயநிதி கைதால் அப்செட்டான ஸ்டாலின்- விஜய்க்கு எதிராக பாஜகவுடன் கூட்டணி அமைக்க திட்டம்

 

உதயநிதி ஸ்டாலினுக்கு எதிராக தமிழக முதல்வர் விஜய் அரசு எடுத்த கைது நடவடிக்கையை மு.க.ஸ்டாலின் உட்பட அவரது குடும்பத்தினரால் ஜீரணிக்க முடியவில்லை.. டதிமுக எம்.பி.க்கள் டி. ஆர். பாலு உள்ளிட்ட சீனியர்கள்  மு.க.ஸ்டாலினிடம் நீண்ட நேரம் பேசியுள்ளனர்.

சாதாரண அவதூறு வழக்குப் போட வேண்டிய விஷயத்திற்கே கடுமையான பிரிவுகளின் கீழ் உதயநிதியை கைது செய்யுமளவுக்கு விஜய் போகிறார் என்றால், இனி அடுத்த எல்லைக்கும் போவார். தவறு செய்தால் திமுக தலைமையின் குடும்பத்தையே நிலைகுலைய செய்ய முடியும் என இமேஜை கிரியேட் பண்ணுகிறார். இதனை அப்படியே விட்டுவிட்டால் திமுகவின் துணிச்சல், போராட்ட உணர்வு எல்லாம் ஒரு கட்டத்தில் சோர்ந்து விடும். அதனால், விஜய் அரசை எதிர்க்க வேண்டுமானால் பாஜக கூட்டணியில் நாம் இணைய வேண்டும். பாஜகவும் நம்மை எதிர்பார்க்கிறது. கூட்டணியில் இணைந்து கேபினெட்டில் நாம் இணைந்தால் தான் தவெக அரசிற்கு பாடம் புகட்ட முடியும் என்று வலியுறுத்தியுள்ளனர்.. இது குறித்து உதயநிதி, துரைமுருகன், நேரு, கனிமொழி, ஏ.வ.வேலு உள்ளிட்டவர்களிடம் ஆலோசனை நடத்தியுள்ளார் ஸ்டாலின்.

அதேநேரம், நமக்கு இப்படி நெருக்கடி கொடுப்பதே, பாஜக பக்கம் தள்ளிவிடத்தான். அப்படி நடந்தால் திமுகவின் அடிப்படை வாக்கு வங்கிக்கே ஆபத்து. இதைத்தான் தமிழக வெற்றிக் கழகம் எதிர்பார்க்கிறது. எனவே இந்த விபரீத ஆட்டம் வேண்டாம் என்று சில எதிர்க்குரல்கள் கட்சியின் சீனியர் ஒருவரிடமிருந்து முன்வைக்கப்பட்டுள்ளதாம். எனவே திமுக தலைமை யோசித்து வருகிறது.