×

எல்லா விஷயங்களிலும் அரசியல் செய்கிறார் ஸ்டாலின் – பாஜக எல்.முருகன் விமர்சனம்!

மாணவர்களின் சென்டிமென்ட்டை தவறாக திசை திருப்புகிறார்கள் என்று பாஜக எல். முருகன் குற்றச்சாட்டியுள்ளார். நாடு முழுவதும் இளநிலை மருத்துவப்படிப்பு மாணவர் சேர்க்கைகான நீட் நுழைவுத் தேர்வு தொடங்கியது. நாடு முழுவதும் உள்ள 3,842 தேர்வு மையங்களில் சுமார் 15.97 லட்சம் மாணவர்கள் நீட் தேர்வு எழுதுகின்றனர். தமிழகத்தில் சென்னை உள்பட 14 இடங்களில் 238 மையங்களில் 1.17 லட்சம் மாணவர்கள் எழுதுகின்றனர். பிற்பகல் 2 மணிக்கு தொடங்கியுள்ள நீட் தேர்வு மாலை 5 மணி வரை நடைபெறவுள்ளது.
 

மாணவர்களின் சென்டிமென்ட்டை தவறாக திசை திருப்புகிறார்கள் என்று பாஜக எல். முருகன் குற்றச்சாட்டியுள்ளார்.

நாடு முழுவதும் இளநிலை மருத்துவப்படிப்பு மாணவர் சேர்க்கைகான நீட் நுழைவுத் தேர்வு தொடங்கியது. நாடு முழுவதும் உள்ள 3,842 தேர்வு மையங்களில் சுமார் 15.97 லட்சம் மாணவர்கள் நீட் தேர்வு எழுதுகின்றனர்.

தமிழகத்தில் சென்னை உள்பட 14 இடங்களில் 238 மையங்களில் 1.17 லட்சம் மாணவர்கள் எழுதுகின்றனர். பிற்பகல் 2 மணிக்கு தொடங்கியுள்ள நீட் தேர்வு மாலை 5 மணி வரை நடைபெறவுள்ளது. இதனிடையே நீட் தேர்வுக்கு எதிராக தமிழகம் முழுவதும் இன்று போராட்டம் நடைபெற்றது. போராட்டத்தின் போது மத்திய அரசு, மாநில அரசுக்கு எதிராக முழக்கங்கள் எழுப்பப்பட்டது.

இந்நிலையில் பாஜக மாநில தலைவர் எல். முருகன் இன்று செய்தியாளர்களை சந்தித்த போது, “‘மாணவர்களின் சென்டிமென்ட்டை தவறாக திசை திருப்புகிறார்கள். உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பின் அடிப்படையில் தான் நீட் தேர்வு நடக்கிறது. மாணவர்களின் உயிருடன் விளையாடக் கூடாது; எல்லா விஷயங்களிலும் ஸ்டாலின் அரசியல் செய்கிறார்” என்று விமர்சித்து பேசியுள்ளார்.