#BREAKING 5 தொகுதி இடைத்தேர்தலுக்கு தயாராக திமுக நிர்வாகிகளுக்கு ஸ்டாலின் உத்தரவு
தமிழகத்தில் 5 தொகுதி இடைத்தேர்தல் தொடர்பாக, நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்திய திமுக தலைவர் ஸ்டாலின், தேர்தல் பணிகளை தொடங்க உத்தரவு பிறப்பித்துள்ளார்.
திருச்சி கிழக்கு உள்ளிட்ட 5 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் தொடர்பாக கட்சியின் முக்கிய நிர்வாகிகளுடன் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டார். 5 தொகுதிகளுக்கு தொடர்புடைய மாநில நிர்வாகிகள், முன்னாள் அமைச்சர்களும் இந்த ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்றனர், கூட்டத்தில் கரூர்,பெருந்துறை, அம்பாசமுத்திரம் விராலிமலை,திருச்சி கிழக்கு ஆகிய 5 தொகுதிகளுக்கு எப்போது வேண்டுமானாலும் இடைத்தேர்தல் அறிவிக்கப்படலாம். எப்போது அறிவிப்பு வந்தாலும் தயாராக இருக்க வேண்டும். தலைமைதான் வேட்பாளரை முடிவு செய்யும் என ஸ்டாலின் திட்டவட்டமாக கூறினார். தேர்தல் பணிகளை இப்போதே தொடங்கவும் நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தினார். தொகுதியில் மக்களிடம் நன்கு அறிமுகமான வேட்பாளர் பட்டியலை தலைமைக்கு அனுப்பி வைக்குமாரு மு.க ஸ்டாலின் நிர்வாகிகளிடம் அறிவுறுத்தியுள்ளார்.