#BREAKING திமுக நிர்வாகிகளுக்கு ஷாக் ட்ரீட்மெண்ட் கொடுக்கும் ஸ்டாலின்
அடுத்த வாரம் திமுகவில் மிகப்பெரிய மாற்றம் செய்யப்படவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
அடுத்த வாரம் திமுகவில் மிகப்பெரிய மாற்றம் செய்யப்படவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. கட்சி அடிப்படை அளவில் மிகப்பெரிய மாற்றத்தை செய்ய திமுக தலைவர் ஸ்டாலின் மற்றும் உதயநிதி ஸ்டாலின் திட்டமிட்டுள்ளனர். இரண்டு சட்டமன்ற தொகுதிக்கு ஒரு மாவட்டச் செயலாளர் என பிரித்து மாவட்ட செயலாளர்கள் எண்ணிக்கையை அதிகப்படுத்த இருக்கின்றார்களாம். இளைஞர்களுக்கான அதிகமான மாவட்ட செயலாளர்களையும் நியமிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. தேர்தலில் சரியாக வேலை செய்யாத மாவட்ட செயலாளர்களின் பதவிகள் பறிக்கப்படுவதாகவும் கூறப்படும் கூறப்படுகின்றது.
அதிமுகவில் இருந்து தான் ஆட்கள் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைகிறார்கள் என்ற பேச்சு அடிபட்டு கொண்டிருக்கும் நிலையில் திமுகவிலிருந்தும் ஒரு சில முக்கியமான ஆட்கள் தமிழக வெற்றி கழகத்தில் இணை இருப்பதாகவும் தகவல் வருகின்றன.