×

ஸ்டாலின் இப்படி செய்யலையே..!! அன்புமணி செயலால் கண்கலங்கிய ராமதாஸ்..!! ‘நானே தலைவர்’ எனவும் திட்டவட்டம்..!!

 

தனது மூச்சு இருக்கும் வரை நான் தான் பாமகவின் தலைவர்,  அன்புமணி செயல்தலைவர் தான் என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.  

விழுப்புரம் தைலாபுரத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் இன்று (ஜூன் 26) செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர், “அன்புமணி உடனான பிரச்சனை குறித்து பேசிக் கொண்டே இருக்கிறோம்; எல்லாவற்றுக்கும் முடிவு வரும். ஆனால் அந்த முடிவு இன்னும் வரவில்லை.  எல்லா பிரச்சனைகளுக்கும் முடிவு உண்டு;  அந்த முடிவு வரலாம். அன்புமணி மன்னிப்பு கேட்பது இங்கே பிரச்சனை அல்ல;  நான் தொடங்கிய கட்சியில் அவர் நான் சொல்கிறபடி செயல்பட வேண்டும் அதுதான் எங்கு பிரச்சனை.   என் மூச்சு இருக்கும் வரை பாமகவுக்கு நானே தலைவர்;   அன்புமணி செயல் தலைவர் தான். கலைஞர் தலைவராக இருந்தபோது மு.க.ஸ்டாலின் எந்த முனுமுனுப்பையும் வெளிப்படுத்தவில்லை.” என்று தெரிவித்தார்.  

ராமதாஸின் 60வது மனைவி விழா நிகழ்ச்சியில் குடும்பத்தினர் அனைவரும் பங்கேற்றிருந்தபோது,  அன்புமணி மற்றும் அவரது குடும்பத்தினர் மட்டும் புறக்கணித்தபோது உங்கள் மனநிலை எப்படி இருந்தது என நிருபர் ஒருவர் கேள்வியெழுப்பினார். அதற்கு நிருபரை பார்த்து  பதிலளித்த அவர், “உங்கள் வீட்டில் மணிவிழா வேண்டாம், 25வது கல்யாண நாள் விழா நடக்கும் போது உங்கள் வீட்டு பிள்ளைகளோ,  பெண் தேவதைகளோ வரவில்லை என்றால் உங்களின் மனநிலை எப்படி இருக்கும்?.. அதே மனநிலை தான் தனக்கும் இருக்கும் எனக்கும்” என்று கூறி கண் கலங்கினர். 

மேலும், பாமகவில் தன்னால்  நியமிக்கப்பட்ட அனைவருக்கும் நிரந்தர பொறுப்பு தான் எனவும் ராமதாஸ் திட்டவட்டமாக தெரிவித்தார்.  “தைலாபுரம் தோட்ட வாசலில் இருந்த பேனர்கள் கிழிக்கப்பட்டது சில விஷமிகளின் செயல்.  மதுரை முருக பக்தர்கள் மாநாட்டிற்கு தனக்கு அழைப்பு வரவில்லை.  முருகன் மாநாட்டில் பெரியார் அண்ணாவை அவமதித்தது வருந்தக்கூடியது மற்றும் கண்டனத்திற்குரியது. தமிழ்நாட்டின் மக்களின் உள்ளங்களில் வாழும் தலைவர்களை கொச்சைப்படுத்த கூடாது; கருத்தில் முரண்பாடு இருந்தாலும் தலைவர்களை கொச்சைப்படுத்த கூடாது.  

எம்.எல்.ஏ அருள் பாமகவின் மாநில இணை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். மாவட்ட செயலாளர் பதவியுடன் கூடுதலாக மாநில இணை பொதுச் செயலாளராகவும் அருள் நீடிப்பார்.” என்றார்.  சேலம் மாநகர் மாவட்ட செயலாளர் பொறுப்பில் இருந்து அருணை நீக்கி அன்புமணி அறிவித்திருந்த நிலையில் ராமதாஸ் இவ்வாறு தெரிவித்தார். 

அன்புமணி ஐந்து பேரின் பிடியில் சிக்கி இருப்பதாக எம்.எல்.ஏ அருள் கூறிய குற்றச்சாட்டு பற்றிய கேள்விக்கு, “அதற்கு தற்போது பதில் கூறமுடியாது ; ஆயிரம் கோயில்களுக்கு சென்று பூஜை செய்தால்தான் அந்த கேள்விக்கு பதில் சொல்ல முடியும்” என்று கூறினார்.  மேலும், “2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கும் நேரத்தில் பாமக பொதுக்குழு கூடும். அப்போது கூட்டணி குறித்து அறிவிக்கப்படும்”என்றார்