முதல்வர் விஜய்க்கு ஸ்டாலின் வேண்டுகோள்..!!
முதல்வர் விஜய்க்கு திமுக தலைவர் ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
அவரது அறிக்கை;
காவிரி நீருக்காகக் கர்நாடக அரசுடன் பேச்சுவார்த்தை எனும் சதிவலையில் தமிழ்நாடு முதலமைச்சர் சிக்கக் கூடாது. வேண்டாம் இந்த விஷப் பரீட்சை. நாம் பல்லாண்டுகள் சட்டப்பூர்வமாகப் போராடிப் பெற்ற உரிமைகளைச் சிதைப்பதாகவே பேச்சுவார்த்தை முயற்சிகள் அமையும்.
நீதிமன்றத்தில் பின்னடைவை ஏற்படுத்திவிடும். இதனால் தான், கடந்த காலங்களில் இந்த யோசனை முன்வைக்கப்பட்ட போதெல்லாம் உறுதியாக அதனை நிராகரித்தது திமுக. கூட்டணி மயக்கத்தில் தமிழகத்தின் காவிரி உரிமை பணயமாகிடக் கூடாது என்பதே டெல்டா விவசாயிகளின் ஒருமித்த குரல்.அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டி; விவசாயச் சங்கத்தினருடன் பேசி அடுத்த கட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வோம்.
பேச்சுவார்த்தைக்காகக் கர்நாடகம் செல்லும் முடிவை முதல்வர் கைவிட வேண்டும்.
இவ்வாறு ஸ்டாலின் கூறி உள்ளார்.