×

ஶ்ரீகாந்த், கிருஷ்ணா ஜாமீன் கோரி ஐகோர்ட்டில் மனுதாக்கல்

 

போதைப் பொருள் பயன்படுத்தியதாக கைது செய்யப்பட்ட  நடிகர்கள் கிருஷ்ணா மற்றும் ஶ்ரீகாந்த் ஆகியோர் ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளனர்.

கொக்கைன் போதைப்பொருள் பயன்படுத்தியதாக  நடிகர் ஶ்ரீகாந்த், கடந்த 23ம் தேதி கைது செய்யப்பட்டார். இதே வழக்கில் கடந்த 26ம் தேதி நடிகர் கிருஷ்ணாவும் கைது செய்யப்பட்டார்.  ஜாமீன் கோரி இருவரும் தாக்கல் செய்த மனுக்களை, சென்னை போதைப் பொருள் கடத்தல் தடுப்பு வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம், தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

இதையடுத்து, இருவர் தரப்பிலும் ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனுக்கள், நீதிபதி நிர்மல் குமார் முன் திங்கள் கிழமை விசாரணைக்கு வர உள்ளது.