×

இலங்கை ‘தாதா’க்கள், தமிழகத்தில் பதுங்கலா?

இலங்கையைச் சேர்ந்த தாதாக்கள் பலர் தமிழகத்தில் பதுங்கி இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது இதனையடுத்து தமிழகத்தில் உள்ள இலங்கை அகதிகள் முகாம்களிலும், மற்றும் சந்தேகப்படும் இடங்களிலும். கியூபிரிவு போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இலங்கையின் மிகப்பெரிய ‘தாதா’ என வருணிக்கப்படும் ‘அங்கொட லொக்கா’ கொலை மற்றும் போதைப்பொருள் கடத்தல் போன்ற குற்றச் சம்பவங்களில் ஈடுபட்டவர். இவர் கோவையில் தலைமறைவாக இருந்து வந்தார்.அவர் தமிழகத்தில் தங்கிருந்தது யாருக்கும் தெரியவில்லை. போலி பாஸ் போர்ட்டில் வந்திருந்தார். கடந்த ஜூலை மாதம்
 

இலங்கையைச் சேர்ந்த தாதாக்கள் பலர் தமிழகத்தில் பதுங்கி இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது இதனையடுத்து தமிழகத்தில் உள்ள இலங்கை அகதிகள் முகாம்களிலும், மற்றும் சந்தேகப்படும் இடங்களிலும். கியூபிரிவு போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.


இலங்கையின் மிகப்பெரிய ‘தாதா’ என வருணிக்கப்படும் ‘அங்கொட லொக்கா’ கொலை மற்றும் போதைப்பொருள் கடத்தல் போன்ற குற்றச் சம்பவங்களில் ஈடுபட்டவர். இவர் கோவையில் தலைமறைவாக இருந்து வந்தார்.அவர் தமிழகத்தில் தங்கிருந்தது யாருக்கும் தெரியவில்லை. போலி பாஸ் போர்ட்டில் வந்திருந்தார். கடந்த ஜூலை மாதம் அவர் மர்மமான முறையில் இறந்தார். இந்த வழக்கை தமிழக சிபிசிஐடி போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
இலங்கையைச் சேர்ந்த சுனில் காமினி என்ற பொன்சேகா போலி

பாஸ்போர்ட்டில் தமிழகம் வந்து தலைமறைவாக இருந்தார். அவரை, கடந்த 13-ம் தேதி தமிழக கியூ பிரிவு போலீஸார் சுற்றி வளைத்து கைது செய்தனர்.இந்த நிலையில், இலங்கையைச் சேர்ந்த 10-க்கும் மேற்பட்ட தாதாக்கள் தமிழகத்தில் பதுங்கி இருப்பதாக ‘இன்டர்போல்’ காவல் துறை துப்பு கண்டு பிடித்துள்ளது இந்த தகவல் தமிழக போலீசுக்கு தெரிவிக்கப்பட்டது இதைத் தொடர்ந்து

தமிழகத்தில் பதுங்கி இருக்கும் இலங்கை தாதாக்களை பிடிக்க கியூ பிரிவு போலீஸார் அதிரடி வேட்டையில் இறங்கியுள்ளனர்.
தமிழகத்தில் இலங்கை நபர்கள் வசிக்கும் பகுதிகளிலும், முகாம்களிலும் விசாரணை நடந்து வருகிறது அங்கொட லொக்கா மற்றும் பொன்சேகா ஆகியோருக்கு உதவி செய்தவர்களிடம் பிடித்து கியூ பிரிவு போலீஸார் விசாரித்து வருகின்றனர். இதுவரை சந்தேகத்தின் பேரில் 20 பேரை பிடித்து கியூ பிரிவு போலீஸார் விசாரித்து வருகின்றனர்.