×

“எங்களுக்கு பதவி வேண்டாம்..’’- எஸ்.பி.வேலுமணி, நத்தம் விஸ்வநாதன் உள்ளிட்டோர் இபிஎஸ்க்கு கடிதம்

 

தாங்கள் நியமித்த பதவிகள் எங்களுக்கு வேண்டாம். நாங்கள் என்றும் கழக உறுப்பினர்களாக இருந்து செயல்படுகிறோம் என எஸ்.பி.வேலுமணி, நத்தம் விஸ்வநாதன், கே.பி.அன்பழகன், பி.தங்கமணி உள்ளிட்ட அதிமுக முக்கிய நிர்வாகிகள் இபிஎஸ்க்கு கடிதம் எழுதியுள்ளனர்.

எஸ்.பி.வேலுமணி, நத்தம் விஸ்வநாதன், கே.பி.அன்பழகன், அருண்மொழித்தேவன், பாலகிருஷ்ண ரெட்டி, SM சுகுமார், வீரமணி என 7 MLA-க்களும் கிருஷ்ணமுரளி, தங்கமணி ஆகிய Ex MLA-க்கள் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு எழுதியுள்ள கடிதத்தில், “நீங்கள் உறுதி அளித்தபடி ஏற்கனவே வகித்த பதவிகளில் நியமிக்காமல், தாமதம் செய்ததோடு உங்கள் விருப்பப்படி பொறுப்புகளை நியமித்தீர்கள். தாங்கள் வழங்கியுள்ள கட்சி பதவிகளை ஏற்று, கழகப் பணியில் எங்களை ஈடுபடுத்திக் கொள்ள இயலாத சூழ்நிலையை நீங்கள் உருவாக்கியுள்ளீர்கள். அந்த பதவிகள் எங்களுக்கு வேண்டாம். நாங்கள் என்றும் கழக உறுப்பினர்களாக இருந்து செயல்படுகிறோம். தேர்தலுக்கு பின் திமுகவுடன் இணைந்து ஆட்சி அமைக்க ஈபிஎஸ் முயன்றார். ஈபிஎஸ் செயலால் 25 MLA-க்கள் தவெக ஆதரவு நிலைப்பாட்டிற்கு தள்ளப்பட்டோம். கடந்த 50 நாட்களில் சாரை சாரையாக அதிமுகவினர் தவெகவுக்கு சென்றுள்ளனர்’’ எனக் குறிப்பிட்டுள்ளனர்.