அதிமுகவில் பிளவு - உச்சகட்ட பரபரப்பு
சட்டமன்ற அதிமுக எம்எல்ஏக்கள் குழு தலைவராக எஸ்.பி. வேலுமணியை தேர்வு செய்ய 30 எம்எல்ஏக்கள் ஆதரவு தெரிவித்தனர்.
எடப்பாடி பழனிச்சாமியை சட்டமன்ற கட்சித் தலைவராக நியமிக்க 17 எம் எல் ஏக்கள் கடிதம் கொடுத்திருந்த நிலையில் தற்போது 30 எம்எல்ஏக்கள் எஸ்பி வேலுமணி தலைமையில் அணிதிரண்டு அவரை சட்டமன்ற கட்சி தலைவராக நியமிக்குமாறு பேரவை தற்காலிக தலைவர் கருப்பையாவிடம் மனு கொடுத்துள்ளனர். முன்னதாக, எடப்பாடி பழனிசாமியை எம்எல்ஏக்கள் குழு தலைவராக தேர்வு செய்ய 17 எம்எல்ஏக்கள் மட்டுமே ஆதரவு தெரிவித்து கடிதம் அளித்தனர். இதனால், அதிமுக-வுக்குள் EPS-க்கு எதிராக பெரும்பான்மை எம்எல்ஏக்கள் இருப்பது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. இரு அணிகளாக அதிமுக பிளவுபட்டிருப்பதை அண்மை சம்பவங்கள் உறுதிப்படுத்தியுள்ளன. நேற்று வரை புரட்சித் தமிழர் எடப்பாடியார் என கூறி வந்த அதிமுகவினர் தற்பொழுது அவரை துரோகி என்று சொல்லத் தொடங்கி இருக்கிறார்கள். இதனால் அதிமுகவில் உச்சகட்ட அரசியல்
பரபரப்பு நிலவி வருகிறது.