×

ஆன்மீகம் அறிவோம் :எந்த ராசியினர் எந்த கணபதியை வணங்கினால் சிறந்தது தெரியுமா?
 

 

1. மேஷம் ராசி:
செவ்வாய் ராசி நாதனாக இருக்கும் மனோ தைரியம் மிக்க மேஷ ராசியினர் ‘வீர கணபதி’ வணங்கி வந்தால் சிறப்பு யோகம் கிடைக்கும்.

2. ரிஷபம்:
சுக்கிரனின் யோகத்தை ராசி நாதனாக கொண்ட ரிஷப ராசியினர், ராஜராஜேஸ்வரியின் அம்சத்தில் இருக்கும் ‘ ஸ்ரீ வித்யா கணபதி’ யை வணங்கினால் எல்லா வளமும் கிடைக்கும்.

3. மிதுனம்:
புதன் ராசி நாதனாக இருக்கும் பல திறமைகளை தன்னுள் வைத்திருக்கும் மிதுன ராசியினர் ‘லட்சுமி கணபதி’ யை வணங்கினால் அனைத்து யோகங்களும் வந்து சேரும்.
 

4.கடகம்:
சந்திரன் யோகத்தை ராசி நாதனாக கொண்ட, பல கலைகளில் வித்தகராகத் திகழும் கடக ராசியினர், ‘ ஹேரம்ப கணபதி’ யை வணங்குதல் நல்லது.

5. சிம்மம்:
இயற்கையிலேயே மிகவும் தைரிய குணம் கொண்ட, ஆளுமை மிக்க சிம்ம ராசியினர் ‘விஜய கணபதி’ யை வணங்கி வந்தால் வாழ்க்கையில் ஜெயம் தான்.

6. கன்னி :
புதன் ராசி நாதனாக கொண்ட கன்னி ராசிக்காரர்கள் தனது வாழ்க்கைத் துணையுடன் சேர்ந்து செயல்பட்டால் எவராலும் வெல்ல முடியாத அளவிற்கு உயர வாய்ப்புண்டு. இவர்கள் ‘மோகன கணபதி’ யை வழிபட வாழ்க்கை சிறப்பாகும்.
 

7. துலாம் :
சுக்கிரனை ராசிநாதனாக கொண்ட துலாம் ராசியினர் வானமே எல்லை என பரந்து சிந்தித்து செயல்படுவதில் வல்லவர்கள். இவர்கள் ‘ஷிப்ர ப்ரசாத கணபதி’ யை வணங்கினால் நல்லது.

8. விருச்சிகம் :
விருச்சிக ராசிக்கு செவ்வாய் ராசி நாதனாக உள்ளார். சுறுசுறுப்பான, நுண்ணறிவோடு செயல்படக்கூடிய விருச்சிக ராசியினர் ‘சக்தி விநாயகர்’ வழிபட்டு வர எல்லா நலனும் கிடைக்கும்.

9. தனுசு :
குரு பகவானின் ஆதிக்கத்தில் பிறந்த தனுசு ராசியினர், குரு அருளையும், கணபதி அருளையும் பெற ‘சங்கடஹர கணபதி’ யை வழிபட்டு வாழ்வில் வளம் பெறுங்கள்.

10. மகரம் :
நியாயத்தின் நீதிபதியாக, அனைவருக்கும் பொதுவாக செயல்படும் சனி பகவானின் ஆதிக்கத்தில் இருக்கும் மகர ராசியில் பிறந்த இவர்கள், ‘யோக கணபதி’ யை வணங்கி வந்தால் எல்லாம் நன்மையாகும்.

11. கும்பம் :
சனி பகவானின் ஆதிக்கத்தில் பிறந்தும், அனைவரையும் அடக்கி ஆள விரும்பும் கும்ப ராசியினர், சித்தி விநாயகரை வணங்கி நல்ல புத்தி பெற்றிருங்கள்.

12. மீனம் :
குருவின் ஆதிக்கத்தில் இருக்கும் கள்ளம் கபடம் இல்லாத மீன ராசியினர், ‘பால கணபதி’ யை வணங்கி வாழ்வாங்கு வாழலாம்.