‘ஸ்ரீராம் இலக்கியக் கழகம்’ நடத்திய பேச்சுப் போட்டி- சென்னையை சேர்ந்த 2 மாணவர்கள் வெற்றி
ஸ்ரீராம் இலக்கியக் கழகம் நடத்திய மாநில அளவிலான பேச்சுப் போட்டியில் சென்னையைச் சேர்ந்த 2 மாணவர்கள் வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளனர்.
இந்தியாவில் நிதி வர்த்தகத்தில் முன்னணி இடத்தை வகித்து வரும் ஸ்ரீராம் குழும நிறுவனங்களின் ஒரு அங்கமாகிய ஸ்ரீராம் இலக்கியக் கழகம், தமிழகம் மற்றும் புதுவையில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்காக நடத்திய திருக்குறள் பேச்சுப் போட்டி இறுதிச் சுற்றில் சென்னையைச் சேர்ந்த இரண்டு மாணாக்கர்கள் மாநில அளவில் பரிசுகளை வென்று சாதனை படைத்துள்ளனர்.
ஸ்ரீராம் இலக்கியக் கழகம், ‘இடைநிலைப் பிரிவு (6-8 ஆம் வகுப்பு)', ‘மேல்நிலைப் பிரிவு (9-12 வகுப்பு)', ‘கல்லூரிப் பிரிவு' என மூன்று பிரிவுகளில் திருக்குறள் பேச்சுப் போட்டியை 1988-ஆம் ஆண்டு முதல் வருடந்தோறும் மாநில அளவில் நடத்தி வருகிறது. இதில் நடப்பாண்டில் மொத்தம் 5620 மாணவர்கள் கலந்து கொண்டனர். இப்போட்டியின் இடைநிலைப் பிரிவில் வானகரம், வேலம்மாள் வித்யாலயா பள்ளி மாணவண் க. ஹரிசரண் இரண்டாம் பரிசையும், மேல்நிலைப் பிரிவில் புதூர், அம்பத்துர், சேது பாஸ்கரா நிறைநிலை மேல்நிலைப் பள்ளி மாணவி ப. யாழினி இரண்டாம் பரிசையும் வென்று சாதனை படைத்துள்ளனர்.
சென்னை, வேலூர், தாம்பரம், புதுச்சேரி, சேலம், திருச்சி, நெல்லை, மதுரை, தஞ்சாவூர், திருவாரூர், கோவை மற்றும் ஈரோடு ஆகிய 12 மண்டலங்களில் கால் இறுதி மற்றும் அரை இறுதிச் சுற்றுகள், கடந்த ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் நடைபெற்றன. இவற்றிற்கான இறுதிச் சுற்று அண்மையில் சென்னையில் நடைபெற்றது. அரை இறுதிச் சுற்றில் வெற்றி பெற்ற 36 போட்டியாளர்கள் (இடைநிலை, மேல்நிலை, கல்லூரி என ஒவ்வொரு பிரிவிலும் - 12 மையங்களில் இருந்து தலா ஒருவர் வீதம் 12 வெற்றியாளர்கள்) இறுதிச் சுற்றில் பங்கேற்றனர்.
இதில் மாநில அளவில் பேச்சுப் போட்டியில் வெற்றி பெற்றோரின் விவரம் வருமாறு:
இடைநிலைப் பிரிவு:
• முதல் பரிசு: அ. மஞ்சுஸ்ரீ , வெங்கிடசாமி நாயுடு நடுநிலைப் பள்ளி, இடையன்குளம், விருதுநகர் (மதுரை மையம்)
• இரண்டாம் பரிசு: க. ஹரிசரண், வேலம்மாள் வித்யாலயா, வானகரம், சென்னை (சென்னை மையம்)
• மூன்றாம் பரிசு: பி. கார்நிஷ், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி, மூலத்துறை (கோவை மையம்)
மேல்நிலைப் பிரிவு:
• முதல் பரிசு: பா. வர்ஷா, ஷெம்ஃபோர்ட் ஃபியூச்சரிஸ்டிக் பள்ளி, சிதம்பரம் (கடலூர் மையம்)
• இரண்டாம் பரிசு: ப. யாழினி, சேது பாஸ்கரா நிறைநிலை மேல்நிலைப் பள்ளி, புதூர், அம்பத்துர், சென்னை (சென்னை மையம்)
• மூன்றாம் பரிசு: கீ. சீ. பனிமலர் பாரதி, மேக்ஸ்வெல் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, தஞ்சாவூர் (தஞ்சாவூர் மையம்)
கல்லூரிப் பிரிவு:
• முதல் பரிசு: மு. சந்தோஷ்குமார், ஏ. இ. எஸ். கலை மற்றும் அறிவியல் கல்லூரி, கிருஷ்ணகிரி (வேலூர் மையம்)
• இரண்டாம் பரிசு: சி. அஸ்வின் அண்ணாமலை, பண்ணாரி அம்மன் தொழில்நுட்பக் கல்லூரி, சத்தியமங்கலம், ஈரோடு (கோவை மையம்)
• மூன்றாம் பரிசு: க. ஸ்ரீநிதி, அ. வ. அ. கல்லூரி (தன்னாட்சி), மன்னம்பந்தல், மயிலாடுதுறை (திருவாரூர் மையம்)
முதல் பரிசு வென்றோருக்கு தலா ரூ. 15,000 ரொக்கமும், இரண்டாம் பரிசை தட்டிச் சென்றோருக்கு தலா ரூ. 10,000 ரொக்கமும், மூன்றாம் பரிசாக தலா ரூ. 7,500 ரொக்கமும் மற்றும் அனைவருக்கும் கோப்பையும், சான்றிதழும் வழங்கப்பட்டன.