×

ஹோலி பண்டிகையை முன்னிட்டு சிறப்பு ரயில்கள் அறிவிப்பு- முழு விவரம்

 

ஹோலி பண்டிகையை முன்னிட்டு கூட்ட நெரிசலை தவிர்க்கவும், பயணிகளின் வசதிக்காகவும் சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட உள்ளது. 

அதன்படி, 

* சென்னை எழும்பூரில் இருந்து வருகிற 28, மார்ச் 7,14 ஆகிய தேதிகளில் இரவு 10.45 மணிக்கு புறப்பட்டு மேற்கு வங்க மாநிலம் சந்திரகாச்சி செல்லும் சிறப்பு ரெயில்(வண்டி எண்.06077), புறப்பட்டதில் இருந்து 3-வது நாள் காலை 7.05 மணிக்கு சந்திரகாச்சி சென்றடையும். மறுமார்க்கமாக, சந்திரகாச்சியில் இருந்து வருகிற மார்ச் 2,9,16 ஆகிய தேதிகளில் காலை 9 மணிக்கு புறப்பட்டு சென்னை சென்டிரல் வரும் சிறப்பு ரெயில்(வண்டி எண்.06078), மறுநாள் மாலை 4.45 மணிக்கு சென்டிரல் வந்தடையும்.

* சென்னை சென்டிரலில் இருந்து வருகிற 23, மார்ச் 2,9 ஆகிய தேதிகளில் இரவு 11.50 மணிக்கு புறப்பட்டு புது டெல்லி ஹசரத் நிஜாமுதீன் செல்லும் சிறப்பு ரெயில்(06019), புறப்பட்டதில் இருந்து 3-வது நாள் மாலை 4 மணிக்கு ஹசரத் நிஜாமுதீன் சென்றடையும். மறுமார்க்கமாக, ஹசரத் நிஜாமுதீனில் இருந்து வருகிற 26, மார்ச் 5,12 ஆகிய தேதிகளில் காலை 6.25 மணிக்கு புறப்பட்டு சென்னை சென்டிரல் வரும் சிறப்பு ரெயில்(06020), மறுநாள் இரவு 11.45 மணிக்கு சென்டிரல் வந்தடையும்.

* சென்னை சென்டிரலில் இருந்து இரவு 11.50 மணிக்கு புறப்பட்டு, 3-வது நாள் இரவு 8 மணிக்கு பீகார் மாநிலம் பரோணி செல்லும் சிறப்பு ரெயில்(06039), வருகிற 22, மார்ச் 1,8 ஆகிய தேதிகளில் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. மறுமார்க்கமாக, பரோணியில் இருந்து இரவு 9 மணிக்கு புறப்பட்டு, 3-வது நாள் மாலை 6 மணிக்கு சென்னை சென்டிரல் வரும் சிறப்பு ரெயில்(06040), வருகிற 25, மார்ச் 4,11 ஆகிய தேதிகளில் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.