தைப்பூசம் சிறப்பு ரயில்கள் இயக்கம்!
பிப்ரவரி 1 அன்று பழனியில் தைப்பூச விழாவையொட்டி மதுரை சந்திப்புக்கும் பழனிக்கும் இடையே முன்பதிவு செய்யப்படாத விரைவு சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளன.
ரயில் எண் 06145: மதுரை சந்திப்பு - பழனி முன்பதிவு செய்யப்படாத விரைவு சிறப்பு ரயில் 01.02.2026 (ஞாயிற்றுக்கிழமை) அன்று காலை 06.00 மணிக்கு மதுரை சந்திப்பிலிருந்து புறப்பட்டு அதே நாளில் காலை 08.30 மணிக்கு பழனியை வந்தடையும். மறுமார்க்கமாக ரயில் எண். 06146: பழனி - மதுரை சந்திப்பு முன்பதிவு செய்யப்படாத விரைவு சிறப்பு ரயில் 01.02.2026 (ஞாயிற்றுக்கிழமை) அன்று பிற்பகல் 2.25 மணிக்கு பழனியில் இருந்து புறப்பட்டு அதே நாளில் மாலை 5.00 மணிக்கு மதுரை சந்திப்பை வந்தடையும். இந்த ரயில்கள் சோழவந்தான், கொடைக்கானல் சாலை, அம்பதுரை, திண்டுக்கல், ஒட்டன்சத்திரம் ஆகிய இடங்களில் நிற்கும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.