சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை நடவடிக்கை : 346 புகார்கள் மீது மின்னல் வேக நடவடிக்கை!
Jul 27, 2026, 05:15 IST
தமிழக காவல் துறை வெளியிட்ட அறிக்கை:
தமிழக சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப் படை, பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்து வருகிறது. கடந்த 17ம் தேதி முதல், நேற்று முன்தினம் வரை, 346 புகார்களுக்கு உடனடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அதில், 28 குற்ற வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, காணாமல் போன ஆறு பெண்கள் மற்றும் 14 குழந்தைகள் மீட்கப்பட்டு, குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.மேலும், அறிவுசார் குறைபாடுடைய 14 நபர்கள் மீட்கப்பட்டு, மறுவாழ்வு அளிக்கப்பட்டது. ஒரு குழந்தை திருமணம் தடுக்கப்பட்டதுடன், 51 பள்ளி இடைநிற்றல் குழந்தைகள் மீண்டும் பள்ளிகளில் சேர்க்கப்பட்டனர்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.