தாம்பரம்- காட்டாங்குளத்தூர் இடையே சிறப்பு புறநகர் ரயில்.. புதிய அறிவிப்பு
Jan 18, 2025, 21:48 IST
வரும் திங்கட்கிழமை (20.01.2025 ) அதிகாலை தாம்பரம் - காட்டாங்குளத்தூர்- தாம்பரம் இடையே 12 பெட்டிகள் கொண்ட சிறப்பு புறநகர் ரெயில்கள் இயக்கப்படும் என தென்னக ரெயில்வே அறிவித்துள்ளது. பொங்கல் விடுமுறை முடிந்து சென்னை திரும்பும் பயணிகள் வசதிக்காக சிறப்பு புறநகர் மின்சார ரெயில்கள் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, வரும் திங்கட்கிழமை அதிகாலை 4 மணி முதல் காலை 6.20 மணி வரை சிறப்பு மின்சார ரெயில்கள் இயக்கப்பட உள்ளது. கிளாம்பாக்கம் பேருந்து முனையம் வந்திறங்கும் பயணிகள் இந்த ரெயில்களை பயன்படுத்தலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.