வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க சிறப்பு முகாம்..!
வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, திருத்தங்கள் செய்ய வரும் 21 மற்றும் 22ஆம் தேதிகளில் தமிழ்நாடு முழுவதும் சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளன. 01.10.2026 அன்று அல்லது அதற்கு முன்போ 18 வயது நிறைவடைந்தும், வாக்காளர் பட்டியலில் பெயர் இடம்பெறாத தகுதியுள்ள அனைவரும் பதிவு செய்யலாம். உங்கள் பகுதியில் நடைபெறும் சிறப்பு முகாம்களில் வாக்காளர் பதிவு, பெயர் சேர்த்தல், திருத்தங்கள், மற்ற சேவைகளை பெற பங்கேற்கலாம். மேலும் 1950 என்ற உதவி மைய எண்ணையும் அழைத்து சந்தேகங்களுக்கு தீர்வு காணலாம்.
இந்திய தேர்தல் ஆணையம் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பதற்கான சிறப்பு சுருக்கமுறை திருத்தப் பணிகளை அறிவித்துள்ளது. இதற்காக நவம்பர் 2026-ல் சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளன. நவம்பர் 21, 22 ஆகிய சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளிலும், நவம்பர் 29 ஞாயிற்றுக்கிழமையிலும் இந்த முகாம்கள் செயல்படும்.
அக்டோபர் 1, 2026 அன்று அல்லது அதற்கு முன்பாக 18 வயது பூர்த்தியடைந்த தகுதியுள்ள அனைவரும் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க விண்ணப்பிக்கலாம். 2027-ம் ஆண்டில் ஜனவரி 1, ஏப்ரல் 1, ஜூலை 1 மற்றும் அக்டோபர் 1 ஆகிய தேதிகளில் 18 வயது பூர்த்தியடைபவர்களும் முன்கூட்டியே விண்ணப்பிக்க வாய்ப்பளிக்கப்படுகிறது. இதற்கான விண்ணப்பங்களை நவம்பர் 12, 2026 முதல் சமர்ப்பிக்கலாம்.
புதிய வாக்காளர்கள் படிவம் 6-ஐயும், வெளிநாடு வாழ் இந்தியர்கள் படிவம் 6A-ஐயும் பயன்படுத்த வேண்டும். பெயர் நீக்கம் செய்ய படிவம் 7-ம், விவரங்கள் திருத்தம் செய்ய படிவம் 8-ம் பயன்படுத்தப்பட வேண்டும். விண்ணப்பங்களை ECINet செயலி மூலமாகவோ அல்லது voters.eci.gov.in என்ற இணையதளம் வழியாகவோ ஆன்லைனில் சமர்ப்பிக்கலாம்.