×

பூந்தமல்லியில் சிறப்பு பேருந்துகள் அதிக அளவில் உள்ளதால் போக்குவரத்து பாதிப்பு!

பூந்தமல்லியில் தீபாவளி பண்டிகைக்கான சிறப்பு பேருந்துகள் அதிக அளவில் உள்ளதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. தீபாவளி பண்டிகைக்காக தமிழக அரசின் சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன. அதன்படி கோயம்பேடு, மாதவரம், பூந்தமல்லி, தாம்பரம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது. அதன்படி பூந்தமல்லியிலிருந்து கிருஷ்ணகிரி, ஓசூர், தர்மபுரி, வேலூர், பெங்களூரு, ஆந்திரா உள்ளிட்ட இடங்களுக்கு அரசு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. அதன்படி முதற்கட்டமாக நேற்றைய 496 அரசு பஸ்கள் இயக்கப்பட்டு உள்ளது.இதனால் பேருந்துகளின்
 

பூந்தமல்லியில் தீபாவளி பண்டிகைக்கான சிறப்பு பேருந்துகள் அதிக அளவில் உள்ளதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

தீபாவளி பண்டிகைக்காக தமிழக அரசின் சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன. அதன்படி கோயம்பேடு, மாதவரம், பூந்தமல்லி, தாம்பரம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது.

அதன்படி பூந்தமல்லியிலிருந்து கிருஷ்ணகிரி, ஓசூர், தர்மபுரி, வேலூர், பெங்களூரு, ஆந்திரா உள்ளிட்ட இடங்களுக்கு அரசு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. அதன்படி முதற்கட்டமாக நேற்றைய 496 அரசு பஸ்கள் இயக்கப்பட்டு உள்ளது.இதனால் பேருந்துகளின் எண்ணிக்கை உயர்ந்துள்ளது. இதனால் பூந்தமல்லி முக்கிய சாலைகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு மற்ற வாகனங்கள் ஊர்ந்து செல்கின்றன. அத்துடன் சென்னை மாநகர அரசு பஸ்கள் பஸ் நிலையத்திற்குள் வராமல் வெளியே நின்று செல்வதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர்.

இதை தொடர்ந்து நெரிசலை கட்டுப்படுத்தும் நோக்கில், பூந்தமல்லி பஸ் நிலையத்திற்கு உட்பட்ட சாலையில் மூன்று இடங்களில் சாலையின் தடுப்புகள் திறக்கப்பட்டு வாகனங்கள் திரும்புவதற்கு வழிவகை செய்யப்பட்டுள்ளன.