×

ஆயுத பூஜை, விஜயதசமிக்கு சிறப்பு பேருந்துகள்

கொரோனா ஊரடங்கால் தமிழக போக்குவரத்து துறை ஸ்தம்பித்திருந்த நிலையில் தற்போது படிப்படியாக அரசுப் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் வரும் 25-ம் தேதி ஆயுதபூஜையும் 26-ம் தேதி விஜயதசமியும் கொண்டாடப்படுகிறது.முன்னதாக 24-ம் தேதி சனிக்கிழமை வருகிறது . இதனால் தொடர்ந்து 3 நாட்கள் அரசு விடுமுறை ஆகும். எனவே வெளியூர் செல்வோரின் எண்ணிக்கையும் அதிகரிக்கும்.கூட்ட நெரிசலை சமாளிக்கும் வகையில் கூடுதலாக அரசுப் பேருந்துகளை இயக்க அரசு முடிவு செய்துள்ளதாகத் தெரிகிறது. தற்போது தமிழகம் முழுவதும்2,500 அரசுப்
 

கொரோனா ஊரடங்கால் தமிழக போக்குவரத்து துறை ஸ்தம்பித்திருந்த நிலையில் தற்போது படிப்படியாக அரசுப் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.


இந்த நிலையில் வரும் 25-ம் தேதி ஆயுதபூஜையும் 26-ம் தேதி விஜயதசமியும் கொண்டாடப்படுகிறது.முன்னதாக 24-ம் தேதி சனிக்கிழமை வருகிறது . இதனால் தொடர்ந்து 3 நாட்கள் அரசு விடுமுறை ஆகும். எனவே வெளியூர் செல்வோரின் எண்ணிக்கையும் அதிகரிக்கும்.கூட்ட நெரிசலை சமாளிக்கும்

வகையில் கூடுதலாக அரசுப் பேருந்துகளை இயக்க அரசு முடிவு செய்துள்ளதாகத் தெரிகிறது. தற்போது தமிழகம் முழுவதும்2,500 அரசுப் பேருந்துகள் இயங்கிக் கொண்டிருக்கும் நிலையில் மேலும் 500 பேருந்துகளை இயக்க முடிவு செய்துள்ளனர். இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் ஒருசில தினங்களில் வெளி வரும் எனத் தெரிகிறது.
–இர.சுபாஸ் சந்திர போஸ்