×

திருவிழாவுக்கு வேளாங்கண்ணிக்கு போறீங்களா? அப்ப இதை தெரிஞ்சிக்கொங்க...

 

வேளாங்கண்ணி மாதா கோயில் திருவிழாவை ஒட்டி வரும் இன்று முதல் செப்டம்பர் 10ம் தேதி வரை சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும் என அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் அறிவித்துள்ளது.


இதுதொடர்பாக அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “வேளாங்கண்ணி புனித அன்னை ஆரோக்கிய மாதா ஆலயத் திருவிழாவை முன்னிட்டு சிறப்பு பேருந்துகள் 27/08/2026 முதல் 10/09/2026 வரை இயக்கப்பட உள்ளது. இத்திருவிழாவை முன்னிட்டு இந்த ஆண்டும் பக்தர்களின் வசதிக்காக அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம். மூலமாக சென்னை, பெங்களூரு. தூத்துக்குடி கன்னியாகுமரி மற்றும் நாகர்கோவில் ஆகிய ஊர்களிலிருந்து வேளாங்கண்ணிக்கு சிறப்பு பேருந்துகள் 27/08/2028 முதல் 10/09/2026 வரை இயக்கப்பட உள்ளது. 29/09/2026 அன்று வேளாங்கண்ணி மாதா கோவிலில் கொடியேறுவதை முன்னிட்டு 28/08/2026 அன்று சென்னையிலிருந்து வேளாங்கண்ணிக்கு 150 சிறப்பு பேருந்துகளும். 29/08/2026 அன்று வேளாங்கண்ணியிலிந்து சென்னைக்கு 150 சிறப்பு பேருந்துகளும் இயக்கப்பட உள்ளது. அதே போல் 08/09/2026 அன்று கொடி இறங்குவதை முன்னிட்டு சென்னையிலிருந்து வேளாங்கண்ணிக்கும். வேளாங்கண்ணியிலிருந்து சென்னைக்கும் 150 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளது. 

மற்ற நாட்களில் தேவைக்கேற்ப சென்னையிலிருந்து வேளாங்கண்ணிக்கும். வேளாங்கண்ணியிலிருந்து சென்னைக்கும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும். பயணிகளின் வசதிக்காக தொலைதூரங்களில் இருந்து இயக்கப்படும் அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகப் பேருந்துகளில் www.tnstc.in மற்றும் tnstc official app மூலம் முன்பதிவு செய்து வேளாங்கண்ணி செல்லவும் மற்றும் அங்கிருந்து பயணிகள் திரும்பும் வகையில் பயணம் செய்யவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது. இதுமட்டுமின்றி குழுவாக பயணம் செய்ய விரும்புபவர்களுக்கு ஒப்பந்த அடிப்படையிலும் பேருந்து இயக்கப்படுகின்றன. மேற்படி சேவையை வேளாங்கண்ணி செல்லும் பக்தர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ளும்படி அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறது.” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.