அனைத்து முக்கிய முருகன் கோயில்களிலும் கந்த சஷ்டிக்கு ஸ்பெஷல் ஏற்பாடு- மூத்த குடிமக்கள், கர்ப்பிணிகளுக்கு தனி தரிசனம்
கந்த சஷ்டி மற்றும் சூரசம்ஹாரம் திருவிழாவை முன்னிட்டு அனைத்து முக்கிய முருகன் திருக்கோயில்களிலும் விரிவான ஏற்பாடுகள் மேற்கொள்ள அமைச்சர் ரமேஷ் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, கந்த சஷ்டி 6 நாட்களும் பக்தர்கள் நீண்ட நேரம் காத்திருக்க கூடாது! கூடுதல் தரிசன வரிசை, கூடுதல் பணியாளர்கள் நியமனம்! காத்திருப்பு நேரத்தை குறைக்க தனித்திட்டம்!
மூத்த குடிமக்கள், கர்ப்பிணி பெண்கள், மாற்றுத்திறனாளிகளுக்கு நீண்ட வரிசையில் நிற்காமல் நேரடி தரிசனம்! அவர்களுக்கு உதவ தன்னார்வலர்கள், தனி ஏற்பாடு! பாதுகாப்பு, வசதிகளுக்கு முன்னுரிமை!
கோயில் வளாகம், காத்திருக்கும் பகுதிகளில் பல இடங்களில் சுத்தமான குடிநீர்! பிஸ்கட் உள்ளிட்ட சிற்றுண்டி இலவசம்! மருத்துவ உதவி மையம், முதலுதவி, அவசர மருத்துவ ஊர்தி தயார் நிலையில்! கழிப்பறை, சுகாதார வசதி தொடர் பராமரிப்பு!
சூரசம்ஹாரம் நாளில் லட்சக்கணக்கான பக்தர்கள் வருவார்கள்! கூட்ட நெரிசல் மேலாண்மை திட்டம் கட்டாயம்! காவல்துறை, தீயணைப்பு, மருத்துவத்துறை, உள்ளாட்சி அமைப்புகளுடன் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்! நுழைவு, வெளியேறும் வழிகள் தனித்தனியாக! அவசரகால வெளியேற்ற பாதை தயார்! தடுப்புகள், கண்காணிப்பு கேமரா, ஒலிபெருக்கி, வழிகாட்டி பலகைகள் அமைக்க உத்தரவு!
அனைத்து பணியாளர்களும் பக்தர்களிடம் மிகுந்த மரியாதை, பொறுமை, கனிவுடன் நடக்க வேண்டும்! கடுமையாக பேசுவது, முறையற்ற நடத்தை கூடாது! புகார்களை உடனே விசாரிக்க வேண்டும்! முக்கிய இடங்களில் பொறுப்பான அலுவலர்கள் நியமனம்!
அனைத்து முருகன் கோயில்களிலும் ஓதுவார்களை கொண்டு தமிழில் திருப்புகழ் பாராயணம்! சொற்பொழிவு, ஆன்மிக உரை, வர்ணனை, இசை கச்சேரி எல்லாம் முருகன் பெருமை, தமிழ் சிறப்பை போற்றும் வகையில்! பூஜை, விழா எல்லாத்திலும் தமிழுக்கு முதன்மை இடம்! ஒலிபெருக்கியில் திருப்புகழ், தேவாரம், திருமுறை, முருக பக்தி பாடல்கள்! அறிவிப்பு, வழிகாட்டி பலகை எல்லாம் தமிழில்!
ஒவ்வொரு முக்கிய முருகன் கோயிலும் தனித்தனியாக செயல்திட்டம் தயாரிக்க வேண்டும்! பக்தர்கள் எண்ணிக்கை, தரிசன ஏற்பாடு, காத்திருப்பு நேரம் குறைப்பு, குடிநீர், மருத்துவம், பாதுகாப்பு, மூத்த குடிமக்கள் வசதி, தமிழ் வழிபாடு என அனைத்து விவரங்களுடன் செய்திக்குறிப்பு தயாரித்து ஆணையர் அலுவலகத்திற்கு அனுப்ப வேண்டும்! ஆணையர் ஒப்புதல் பெற்ற பிறகே பத்திரிகை, ஊடகங்களுக்கு வெளியிட வேண்டும்!
அனைத்து ஏற்பாடுகள் தொடர்பான முழு திட்டத்தையும் உடனடியாக தயாரிக்க வேண்டும்! ஒவ்வொரு கோயில் செயல் அலுவலரும் தங்கள் செயல்திட்டம், செய்திக்குறிப்பை ஆணையர் அலுவலகத்திற்கு அனுப்ப வேண்டும்! அனைத்து முக்கிய முருகன் கோயில்களின் ஏற்பாடுகள் குறித்த முழு விவரங்களையும் அமைச்சர் சீ.ரமேஷ் அவர்களிடம் சமர்ப்பிக்க வேண்டும்!
கந்த சஷ்டி, சூரசம்ஹாரம் முருக பக்தர்களுக்கு மிக முக்கியமான ஆன்மிக திருவிழா. பக்தர்களின் வசதி, பாதுகாப்பு, மரியாதை, தமிழ் வழிபாடு ஆகிய 4 அம்சங்களிலும் எந்த குறைபாடும் இருக்க கூடாது!" முருகனுக்கு தமிழில் வழிபாடு, பக்தர்களுக்கு மரியாதையான தரிசனம் - இது தான் தமிழக அரசின் ஆன்மிக புரட்சி! வெற்றிவேல்முருகனுக்கு அரோகரா!