×

சாத்தான்குளம் வழக்கு: நீதிபதியை தரக்குறைவாக பேசிய காவலர் மகாராஜன் மட்டும் பணியிடை நீக்கம்!

தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் காவல் நிலையத்துக்கு விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட வியாபாரி ஜெயராஜ், அவரின் மகன் பென்னிக்ஸ் ஆகியோர் கோவில்பட்டி சிறையில் அடைக்கப்பட்டனர். உடல் நலம் பாதிக்கப்பட்ட இருவரும் கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி முதலில் பென்னிக்ஸ் இறந்தார். மறுநாள் ஜெயராஜ் உயிரிழந்தார். அடுத்தடுத்து தந்தை, மகன் இறந்த சம்பவத்துக்கு சாத்தான்குளம் போலீசார்தான் காரணம் எனக்கூறி வியாபாரிகள் தமிழகம் முழுவதும் கடைகளை அடைத்தனர். காவல்துறையினர் மீது கொலை வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்று
 

தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் காவல் நிலையத்துக்கு விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட வியாபாரி ஜெயராஜ், அவரின் மகன் பென்னிக்ஸ் ஆகியோர் கோவில்பட்டி சிறையில் அடைக்கப்பட்டனர். உடல் நலம் பாதிக்கப்பட்ட இருவரும் கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி முதலில் பென்னிக்ஸ் இறந்தார். மறுநாள் ஜெயராஜ் உயிரிழந்தார். அடுத்தடுத்து தந்தை, மகன் இறந்த சம்பவத்துக்கு சாத்தான்குளம் போலீசார்தான் காரணம் எனக்கூறி வியாபாரிகள் தமிழகம் முழுவதும் கடைகளை அடைத்தனர். காவல்துறையினர் மீது கொலை வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி அரசியல் கட்சிகள் முதல் பொதுமக்கள் வரை கொரோனா காலக்கட்டத்திலும் போராட்டத்தில் குதித்தனர்.

 


இதற்கிடையில் தந்தை, மகன் உயிரிழந்த சம்பவத்தை சிபிஐக்கு மாற்ற அனுமதிக்கக்கோரி தமிழக அரசு உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் முறையீடு செய்தது. அரசின் கொள்கை முடிவுக்கு நீதிமன்ற அனுமதி தேவையில்லை என உயர்நீதிமன்றம் பதிலளித்தது. இந்த விவகாரத்தில் சாத்தான்குளம் காவல்நிலையத்தில் இருக்கும் காவலர் மகாராஜன், மாஜிஸ்திரேட்டிடம் “உன்னால ஒன்னும் புடுங்க முடியாதுடா” என மரியாதை குறைவாக பேசியதாக சொல்லப்படுகிறது. மேலும் மாஜிஸ்திரேட் கேட்ட தரவுகளையும் அந்த காவலர் தர மறுத்துள்ளார். இதனிடையே தந்தை, மகன் சித்ரவதை மரண விவகாரம் தொடர்பாக தூத்துக்குடி கூடுதல் காவல் கண்காணிப்பாளர் குமார் உட்பட 3 பேர் இன்று நேரில் ஆஜராக உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது. தூத்துக்குடி ஏஎஸ்பி குமார், டிஎஸ்பி பிரதாபன், காவலர் மகாராஜன் ஆகியோர் நாளை காலை ஆஜராக உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது. காவலர் மகாராஜன் செயலுக்கு மு.க. ஸ்டாலின் உள்ளிட்ட பலரும் கண்டனம் தெரிவித்தனர்.

இந்நிலையில் தூத்துக்குடி மாவட்ட காவல் கூடுதல் கண்காணிப்பாளர் D.குமார் மற்றும் சாத்தான்குளம் காவல் துணை கண்காணிப்பாளர் C.பிரதாபன் ஆகியோர் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அதேபோல் நீதிபதியை தரக்குறைவாக பேசிய காவலர் மகாராஜன் மட்டும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.