எம். எல். ஏக்களுக்கான பயிற்சி முகாமில் சபாநாயகர் மகன் பங்கேற்பு
தமிழ்நாடு சட்டப்பேரவை நடத்தும் புனிதமான Legislators Leadership Programme (LLP) பயிற்சி முகாமில் பெரும் சர்ச்சை வெடித்துள்ளது.
30 எம். எல். ஏக்களுக்கு மட்டுமே என்று அறிவிக்கப்பட்ட முதல் பேட்ச் பயிற்சி மாமல்லபுரத்தில் தொடங்கியது. சபாநாயகர் JCD பிரபாகர் தலைமையில் நடந்தது. பயிற்சிக்கு பிறகு எடுக்கப்பட்ட குழு புகைப்படத்தில், எம். எல். ஏக்கள் வரிசையில் எம். எல். ஏ இல்லாத ஒருவர் நிற்பது தெரிந்தது. அவர் வேறு யாரும் இல்லை, சபாநாயகரின் மகன் அமலன்! "30 எம். எல். ஏக்களுக்கு தானே பயிற்சி, எம். எல். ஏ இல்லாத இவருக்கு அங்கே என்ன வேலை? தேவையில்லாமல் எதற்கு உள்ளே வரணும்?" என்று கேள்வி எழுந்தது. விசாரித்ததில், அமலனுக்கு சபாநாயகரின் செய்தி தொடர்பு அதிகாரி (PRO) பதவி வழங்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதாவது, அந்த பயிற்சி முகாமில் அவர் சாதாரணமாக வரவில்லை, அதிகாரப்பூர்வ PRO என்ற பதவியில் வந்துள்ளார்.
தந்தை சபாநாயகர் என்ற ஒரே தகுதிக்காக மகனுக்கு சட்டசபைக்குள் பதவியா? இனி சட்டசபை செய்திகளை மக்களுக்கு சொல்வது யார் - அரசு அதிகாரியா? இல்லை சபாநாயகரின் மகனா? *"TRUTH ALONE TRIUMPHS" என்ற வாசகத்தின் கீழ் நடக்கும் நிகழ்ச்சியில், உண்மையில் நடப்பது என்ன? என்று தமிழகமே கேள்வி கேட்கிறது.