×

‘துண்டு சீட்டு’ வந்தவுடன் திடீரென மாற்றி பேசிய சபாநாயகர்- வைரலாகும் வீடியோ

 

சபாநாயகர் ஒருதலைபட்சமாக செயல்படுவதாக எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் குற்றஞ்சாட்டினார்.

பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்த பின் செய்தியாளர்களிடம் பேசிய எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின், “முதல்வரின் பதிலுரை சினிமா ஷூட்டிங் போல இருந்தது. பதிலுரை முழுவதும் ரீல்ஸ் கன்டென்ட்தான். பேச அனுமதிப்பதாக சொன்ன சபாநாயகர், துண்டு சீட்டை பார்த்து மறுத்துவிட்டார். துண்டு சீட்டு ஒன்னு வந்துச்சு..உடனே வாய்ப்பு தர முடியாதுன்னு மாற்றிவிட்டார்” எனக் குற்றஞ்சாட்டினார்.

அனுமதி தருவது போல் ஏமாற்று வேலை தலைமை தற்குறி அமைச்சர் துண்டு சீட்டு சபாநாயகரிடம் உதவியாளர் மூலம் கொடுக்கும் செயல் கேடு கெட்ட செயல்,
கருத்துக்கு கருத்து எதிர்கொள்ள துணிவு இல்லாத தவெக அரசு,#TvkFails,#No1FakeTvk, pic.twitter.com/kCiUSfgZAI

— Mmpvijaykumar (@46Mmp) September 7, 2026


இந்நிலையில் இதுதொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகிவருகிறது. வீடியோவில் மைக்கில் எதிர்க்கட்சி தலைவரை பேச சொல்லுங்கள் என முதல்வர் விஜய் கூறினார். அப்போது எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் பேச அனுமதிப்பதாக சபாநாயகர் அறிவித்தார். அடுத்த நொடி சபாநாயகரின் உதவியாளர் மேஜையில் திடீரென துண்டு சீட்டை வைக்க, அதனை பார்த்தவுடன் சபாநாயகர், “இல்லங்க... நா அனுமதிக்கிறதா இல்ல... இந்த பிரச்சனையில் என்னுடைய முடிவை நீங்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும். எதிர்க்கட்சி தலைவரை அனுமதிப்பதாக இல்லை” எனக் கூறுகிறார்.