×

ராஜினாமா செய்த அதிமுக எம்.எல்.ஏ.க்களுக்கு சபாநாயகர் பிரபாகர் அழைப்பு 

 

ராஜினாமா செய்த அதிமுக எம்.எல்.ஏ.க்களுக்கு சபாநாயகர் பிரபாகர் அழைப்பு விடுத்துள்ளார்.


நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் அதிமுக தோல்வி அடைந்துள்ளது. ஏற்கனவே ஐந்து ஆண்டுகள் எதிர்க்கட்சியாக அதிமுக இருந்த நிலையில், இப்போது எதிர்க்கட்சி அந்தஸ்தையும் திமுகவிடம் இழந்துள்ளது. அதிமுகவின் தோல்விக்கு தவெக உடன் கூட்டணி வைக்காதது தான் காரணம் என்று நிர்வாகிகள் குற்றம்சாட்டுகிறார்கள். அத்துடன் திமுக உடன் சேர்ந்து ஆட்சியமைக்க எடப்பாடி பழனிசாமி முயற்சிப்பதாக கூறி, அந்த கட்சியில் இருந்து முன்னணி நிர்வாகிகள் விலகி வருகிறார்கள். அதிமுகவில் தேர்வான 6 எம்.எல்.ஏ.க்கள் அடுத்தடுத்து ராஜினாமா செய்து விட்டு த.வெ.க.வில் சேர்ந்துள்ளனர். முன்னாள் அமைச்சர்கள் பலரும் அ.தி.மு.க.வில் இருந்து விலகி இருக்கிறார்கள். இந்த சூழலில் அ.தி.மு.க.வின் எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ளது. 

இந்நிலையில் ராஜினாமா செய்த அதிமுக எம்.எல்.ஏ.க்களுக்கு சபாநாயகர் பிரபாகர் அழைப்பு விடுத்துள்ளார். ராஜினாமா செய்த எம்.எல்.ஏக்களை இபிஎஸ் முன்னிலையில் விசாரிக்க சபாநாயகர் பிரபாகர் திட்டமிட்டுள்ளார். ஆகஸ்ட் 30ஆம் தேதி தலைமை செயலகத்தில் சபாநாயகர் அறையில் விசாரணை நடைபெறவுள்ளது. அவர்களிடம் ஏற்கனவே 3 முறை விசாரித்த நிலையில், அதிமுகவிலிருந்து விலகி எம்.எல்.ஏ பதவியையும் ராஜினாமா செய்ததை ஏற்க இபிஎஸ் எதிர்ப்பு தெரிவித்ததால் மீண்டும் விசாரணை நடத்த சபாநாயகர் திட்டமிட்டுள்ளார். இதற்காக ராஜினாமா செய்த மரகதம் குமரவேல், ஜெயக்குமார், இசக்கி சுப்பையா, சத்திய பாமா ஆகியோருக்கு சபாநாயகர் அழைப்பு விடுத்துள்ளார்.