×

''நாளை முக்கியமான நாள்''- சபாநாயகர் ஜேசிடி பிரபாகர்

 

கூட்டத்தொடரின் இறுதி நாளான நாளை வினாக்கள் விடைகள் நேரம் இல்லை. நாளை விரைவாக முடிக்க வேண்டும் என சபாநாயகர் ஜேசிடி பிரபாகர் கூறியுள்ளார்.

செய்தியாளர்களிடம் பேசிய சபாநாயகர் ஜேசிடி பிரபாகர், “கூட்டத்தொடரின் இறுதி நாளான நாளை வினாக்கள் விடைகள் நேரம் இல்லை. நாளை விரைவாக முடிக்க வேண்டும். நாளை 8 துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற உள்ளது. பேரவை விதி 185 படி கடைசி நாள் பிற்பகல் 1.30 மணி அளவில் ஒரு மானிய கோரிக்கை குறைக்கப்படும். மானிய கோரிக்கை எத்தனை பேர் பேசினாலும் மதியம் 1.30 மணிக்குள் நிறைவு செய்ய வேண்டும். நாளை கட்சியில் ஒருவருக்கு மட்டுமே பேச அனுமதி வழங்கப்படும். மதியம் 1.30 மணிக்கு பிறகு யார் யார் எந்த குழுக்களில் உள்ளனர் என கூற வேண்டும். சைகை மொழி நேரலைக்கு கேட்ட கோரிக்கை ஆலோசிக்கப்பட்டுள்ளது, நாளை பதில் கொடுக்கப்படும்” என்றார்.