ஒன்று சேரும் அதிமுக அணிகள்? பழனிசாமியை சந்தித்த வேலுமணி ஆதரவு 4 எம்.எல்.ஏ.க்கள்
வேலுமணி ஆதரவு 4 எம்.எல்.ஏ.க்கள் இ.பி.எஸ்.சை சந்திக்க வருகை புரிந்துள்ளனர். முன்னாள் அமைச்சர் தங்கமணியும் இ.பி.எஸ் இல்லத்திற்கு வருகை புரிந்துள்ளார்.
அதிமுகவின் இரு அணிகளும் இன்று மாலை 4 மணிக்கு அதிமுக தலைமை அலுவலகத்தில் இணையும் என கூறப்பட்ட நிலையில் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. கடைசி நேரத்தில் இபிஎஸ் தரப்பு வைத்த நிபந்தனையால் அணிகள் இணைப்பில் பின்னடைவு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அனைவரும் மன்னிப்பு கடிதம் அளிக்க வேண்டும் என இபிஎஸ் தரப்பில் கூறியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதற்கு சி.வி.சண்முகம் தரப்பு மன்னிப்பு கடிதம் எல்லாம் கொடுக்க முடியாது என கூறி அனைவரும் திரும்பி சென்றதாக தெரிகிறது.
இந்தசூழலில் சென்னை பசுமை வழிச்சாலை இல்லத்தில் இ.பி.எஸ்.சை சந்திக்க வேலுமணி ஆதரவு எம்.எல்.ஏ.க்கள், நிர்வாகிகள் வருகை புரிந்துள்ளனர். நத்தம் விஸ்வநாதன், அரி, அருண்மொழி தேவன், ரவி மனோகரன் ஆகியோர் இ.பி.எஸ்.சை சந்திக்க வருகை புரிந்துள்ளனர். அவர்களுடன் முன்னாள் அமைச்சர் தங்கமணியும் இ.பி.எஸ் இல்லத்திற்கு வருகை புரிந்துள்ளார். ஆனால் இபிஎஸ்-ஐ சந்திக்க எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம், சி.விஜயபாஸ்கர், ஆர்.காமராஜ், எம்.ஆர்.விஜயபாஸ்கர் உள்ளிட்டோர் வரவில்லை. அடுத்தடுத்து அதிமுக எம்.எல்.ஏக்கள் ராஜினாமா செய்வதால் எஸ்.பி.வேலுமணி தரப்பு MLAக்களின் ஆதரவு எண்ணிக்கை தொடர்ந்து சரிகிறது