“விஜய் கட்சி கணக்கிலேயே இல்லை” - எஸ்.பி. வேலுமணி விமர்சனம்
Apr 19, 2026, 15:04 IST
சந்தை நாளையொட்டி வால்பாறை நகரில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தில், எஸ்.பி. வேலுமணி, நடிகர் விஜய் தொடங்கிய அரசியல் கட்சியை கடுமையாக விமர்சித்தார்.
அப்போது பேசிய எஸ்பி வேலுமணி, “விஜய் கட்சி இன்னும் அரசியல் ரீதியாக நிலைநிறுத்தப்படவில்லை. இந்த தேர்தலில் அது கணக்கிலேயே இல்லை. மக்கள் நலன் சார்ந்த திட்டங்களை செயல்படுத்திய அனுபவம் அதிமுகவுக்கே உள்ளது. தனால் தான் வாக்காளர்கள் “இரட்டை இலை” சின்னத்திற்கே ஆதரவு அளிக்க வேண்டும். வால்பாறை பகுதி மேம்பாட்டிற்காக பூங்கா, படகு இல்லம் உள்ளிட்ட சுற்றுலா வசதிகள் புதுப்பிக்கப்படும்.தோட்ட தொழிலாளர்களின் சம்பள உயர்வு உள்ளிட்ட பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்படும்” என்று உறுதி அளித்தார்.