×

எஸ்பி வேலுமணி, நத்தம் விஸ்வநாதன் அதிமுகவில் இருந்து விலக முடிவு

 

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மீதான அதிருப்தி காரணமாக எஸ்பி வேலுமணி, நத்தம் விஸ்வநாதன் ஆகியோர் அதிமுகவில் இருந்து விலக முடிவு செய்துள்ளனர்.

தொண்டாமுத்தூர் பகுதியில் உள்ள ஆதரவாளர்களை சந்தித்து நேற்று முன்தினம் ஆலோசனை நடத்தியுள்ளார்வேலுமணி. அப்போது நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பாக அதிமுக இந்த தேர்தலில் ஜெயிக்க வேண்டும் என்றால் ஓ பன்னீர்செல்வத்தை மீண்டும் கட்சியில் சேர்க்க வேண்டும் என்று வலியுறுத்தியதாகவும், ஆனால் எடப்பாடி பழனிச்சாமி அதை ஏற்க மறுத்து விட்டதாகவும் அதனாலயே நடந்த தேர்தலில் மிகப்பெரிய தோல்வியை சந்தித்ததாகவும் ஆதரவாளர்கள் மத்தியில் உருக்கமாக பேசினார். மேலும் தனது ஆதரவாளர்களுக்கு எடப்பாடி பழனிச்சாமி பதவியை பறித்த நிலையில் மீண்டும் அவர்களுக்கு பதவி வழங்குவது தொடர்பாக அவர் குறிப்பிடும்படி எந்த உத்தரவாதமும் வழங்கவில்லை. தற்போது வேலுமணிக்கு டம்மி பதவி வழங்கப்பட்டுள்ள நிலையில் அவர் எடப்பாடி பழனிச்சாமி மீது கடும் அதிருப்தியில் உள்ளார். ஏற்கனவே கட்சியில் முக்கிய நிர்வாகிகள் முன்னாள் அமைச்சர்கள் மற்றும் இன்னாள் எம்எல்ஏக்கள் பலர் சென்றுவிட்ட நிலையில் எஸ்.பி வேலுமணியும் கட்சியிலிருந்து வெளியேற திட்டமிட்டு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது..

தவெக, திமுக என இரு கட்சியினரும் வேலுமணியிடம் பேசி வருவதால், எந்த கட்சியில் இணைவது என ஆலோசித்து வருவதாக தகவல். அதேபோல எடப்பாடி பழனிச்சாமி மீது அதிருப்தியில் உள்ள நத்தம் எம்எல்ஏவும் முன்னாள் அமைச்சருமான நத்தம் விஸ்வநாதனும்  தனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்து விட்டு தமிழக வெற்றி கழகத்தில் இணைய திட்டமிட்டு இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.