#BREAKING : தவெக அமைச்சரவையில் இடம் -எஸ்.பி.வேலுமணி விளக்கம்..!!
சென்னையில் இன்று (மே 22) செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தவெக அமைச்சரவையில் இடம்பெறுவோம் என்று எங்கும் நாங்கள் சொல்லவில்லை என்று தெரிவித்துள்ளார்.
அமைச்சரவையில் இடம் பெறுவோம் என நாங்கள் ஒருமுறை கூட கூறவில்லை. சிலர் திட்டமிட்டு இதே கருத்தை கூறி வருகின்றனர்.
மக்கள் ஆதரவு அடிப்படையில் அவர்களுக்கு ஆதரவளித்தோம். அம்மா உணவகம், தாலிக்கு தங்கம் உள்ளிட்ட அதிமுகவின் திட்டங்கள் தொடர வேண்டும் என வலியுறுத்தினோம். பதவிக்காக சென்றோம் என சில பொய்யான தகவலை பரப்புகிறார்கள்.
திமுக எதிர்ப்பு என்பதற்காகவே தவெகவிற்கு ஆதரவு அளித்தோம்.புதிய அமைச்சர்களாக பொறுப்பேற்றுள்ளவர்களுக்கு வாழ்த்துகள்.
எங்களுக்கு எடப்பாடி பழனிசாமி தான் பொதுச்செயலாளர். கட்சியை பலப்படுத்த வேண்டும் என்பதே எங்கள் நோக்கம். திமுக எதிர்ப்பு என்பதற்காகவே அவர்களுக்கு ஆதரவு கொடுத்தோம்" என செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.